1952 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் நாள் ஒரு மிகப்பெரிய, வலிமையான புயல், எஸ்.எஸ். பென்டல்டன் என்ற எண்ணெய் கப்பலை இரண்டு துண்டாக உடைத்தது. மசாசுசெட் கடற்கரையிலிருந்து சுமார் பத்து மைல்களுக்கப்பால் இந்த நிகழ்வு ஏற்பட்டது. நாற்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான காற்றினாலும், கொடூரமான அலைகளாலும் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் அகப்பட்டுக் கொண்டனர்.

சாத்தம் என்ற இடத்திலுள்ள கடலோர காவற்படையினருக்கு இந்த செய்தி கிடைத்தபோது, மசாசுசெட்டிலிருந்து படகு சவாரியில் திறமைவாய்ந்த பெர்னி வெப்பர் மூன்று பேரை அழைத்துக் கொண்டு, ஓர் உயிர்காக்கும் படகில், தப்பிக்கமுடியாத சூழலில் அகப்பட்டு திகைத்து நின்ற கப்பல் பயணிகளை, முடியாத ஒரு நிலையிலிருந்து காப்பாற்றி கரை சேர்த்தார். இவர்களுடைய இந்த தைரியமான முயற்சி அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடலோரக் காவற்படையினரின் சரித்திரத்தில் மிகப்பெரிய மீட்பு செயலாகக் கருதப்பட்டது. அதுவே அந்த ஆண்டு 2016ல் திரைப்படத்துறையினரின் முக்கிய தலையங்கமாகக் கருதப்பட்டது.

லூக்கா 19:10ல் இயேசு தன்னுடைய மீட்புப் பணியை வெளிப்படுத்துகின்றார். ‘இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” என்றார். சிலுவையும், உயிர்த்தெழுதலுமே அந்த மீட்பின் பிரதான வெளிப்பாடாக இருந்தது. இயேசு தாமே நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு, அவரை விசுவாசிப்பவர்களைப் பிதாவிடம் சேர்க்கவே இவ்வுலகிற்கு வந்தார். 2000 வருடங்களாக தேவன் தருகின்ற இந்த விலையேறப்பெற்ற மீட்பின் வாழ்வை இப்பொழுதும், பிற்பாடு நாம் அவரோடு நித்தியமாக வாழப்போகின்ற வாழ்வையும் ஏற்றுக் கொண்டு, அரவணைத்து வருகின்றனர், மீட்கப்பட்டவர்கள்!

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம் பரிசுத்த ஆவியானவரின் உதவியால் நமது இரட்சகரின் மிகப்பெரிய மீட்புப் பணியில் இணைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். உன் வாழ்வில் நீ சந்திக்கின்ற யாருக்கு அவருடைய மீட்பின் அன்பு தேவையாயிருக்கின்றது?