எர்னஸ்ட் ஹெம்மிங்வேயிடம் ஒருமுறை ஆறு வார்த்தைகளில் ஒரு கதையை எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர், ”விற்பனைக்கு உள்ளன- குழந்தையின் ஷூ_க்கள், இதுவரை அணியப்படாதவை” என எழுதினார். ஹெம்மிங்வேயின் கதை மிகவும் வலிமை வாய்ந்தது, ஏனெனில் அது நம்மை, அதற்கான விளக்கங்களை நிரப்பும்படி சிந்திக்கச் செய்கின்றது. சுகமாய் வாழும் ஒரு குழந்தையால் அந்த ஷூ _க்களை பயன்படுத்த முடியவில்லையா? அல்லது அங்கு ஒரு கொடுரூரமான இழப்பா? ஏதோ ஓரிடத்தில் தேவனுடைய ஆழ்ந்த அன்பும் ஆறுதலும் தேவைப்படுகின்றதா?

மிகச் சிறந்த கதைகள் நம் கற்பனையில் தூண்டப்படுகின்றன. இதுவரை பேசப்படாத மிகப் பெரிய கதை நம்முடைய சிந்தனையில் உருவாகிறது. தேவனுடைய கதையிலும் ஒரு மத்திய கருத்து உள்ளது. தேவன் யாவையும் படைத்தார். நாம் (மனித குலம்) பாவத்தில் விழுந்தோம். இயேசு இவ்வுலகிற்கு வந்தார், மரித்தார், நம்மை பாவத்திலிருந்து விடுவிக்க, அவர் உயிர்த்தெழுந்தார், மீண்டும் நாம் அவருடைய வருகையையும் அனைத்தையும் மீட்டு புதுப்பிக்கும் நாளையும் எதிர்பார்த்திருக்கின்றோம்.

முன்பு என்ன நடந்ததென்பதையும், இனிமேல் என்ன நடக்குமென்பதையும் தெரிந்து கொண்ட நாம், இப்பொழுது எப்படி வாழவேண்டும்? இயெசு தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் பொல்லாங்கனின் பிடியிலிருந்து மீட்டு புதிதாக்கும் போது, ‘அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்” (ரோம. 13:12) இதன் மூலம், தேவ பெலத்தால் நாம் பாவத்தை விட்டுத் திரும்பி, அவரையும் மற்றவர்களையும் அன்புகூரத் தெரிந்து கொள்வோம் (வச. 8-10).

நாம் இயேசுவோடு சேர்ந்து என்னென்ன வழிகளில் பாவத்திற்கு எதிர்த்து நிற்கலாமென்பது, நமக்கிருக்கின்ற கொடைகளையும், என்ன தேவைகள் நமக்கிருக்கின்றன என்பதைச் சார்ந்ததேயாம். நாம் நம்முடைய கற்பனையை பயன்படுத்தி நம்மைச் சுற்றிலும் பார்ப்போம். நாம் காயமுற்றவர்களையும், அழுகின்றவர்களையும் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு தேவனுடைய நீதியையும் அன்பையும், ஆறுதலையும் தேவனுடைய வழிநடத்தலின்படி கொடுப்போம்.