என்னுடைய நண்பன் டேவிட்டின் மனைவி அல்சைடன் (நினைவை இழத்தல்) வியாதியினால் தாக்கப்பட்ட போது அவனுடைய வாழ்வு பெரிதும் பாதிப்புக்குள்ளானது. அவன் தன் மனைவியை கவனிக்கும்படி தன் வேலையிலிருந்து கட்டாய ஓய்வு வாங்க வேண்டியதாயிற்று. அந்த வியாதி மேலும் மேலும் அதிகரிக்க, அவளுக்கு இன்னும் அதிக கவனம் தேவைப்பட்டது.
”நான் தேவன் மீது கோபத்திலிருக்கின்றேன்” என்றான். ”நான் எவ்வளவுக்கதிகமாக ஜெபிக்கின்றேனோ, அவ்வளவுக்கதிகமாய், தன்னலத்தோடு வாழ்கின்ற என்னுடைய இருதயத்தைக் குறித்துக் காண்பிக்கின்றார்” என்றான். கண்ணீர் அவனுடைய கண்களைக் குளமாக்கின. ‘அவள் பத்து ஆண்டுகளாக சுகவீனமாக இருக்கின்றாள். தேவன் என்னை காரியங்களை வேறு விதமாகப் பார்க்கச் செய்கின்றார். நான் இப்பொழுது எல்லாவற்றையும் அன்பினாலேயே செய்கின்றேன். மேலும் அவற்றை இயேசுவுக்காகச் செய்கின்றேன். அவளை கவனிப்பதே என் வாழ்வின் மிகப் பெரிய கொடையாகவுள்ளது” என்றான்.
சில வேளைகளில் தேவன் நம்முடைய ஜெபங்களில் நாம் கேட்கின்றவற்றின் பதிலை கொடுக்காமல் நம்மை மாற்றும்படியாகச் செயல்படுகின்றார். தேவன் பொல்லாப்பு நிறைந்த நினிவே பட்டணத்தை அழிக்காமல் விட்டபோது தீர்க்கதரிசி யோனாவிற்கு கோபம் வந்தது. தேவன் யோனாவிற்கு நிழல் தரும்படி ஓர் ஆமணக்குச் செடியை முளைக்கச் செய்தார் (யோனா 4:6). பின்னர் அதனை காய்ந்து போகச் செய்தார். யோனா அதனைக் குறித்து குற்றம்சாட்டிய போது தேவன், ‘நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ?” என்றார். யோனா தன்னைக் குறித்து மட்டுமே சிந்திக்கின்றான். எனவே ”நல்லது” என்கின்றான். ஆனால், தேவன் அவனைப் பிறரைக் குறித்துக் சிந்திக்கச் செய்கின்றார். பிறர் மீது கரிசனைகொள்ளச் செய்கின்றார்.
தேவன் சில வேளைகளில் நம்முடைய ஜெபங்களை, நாம் எதிர்பாராத விதமாக பதிலளித்து, நாம் இந்த மாற்றத்தை திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்வோம், ஏனெனில், அவர் நம்மை அவருடைய அன்பினால் மாற்ற விரும்புகின்றார்.
நாம் தேவனோடு நேரம் செலவிடும்போது,
நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் வளர அவர் உதவுகின்றார்