ரோமப் பேரரசர்களில் முதலானவரும் மிகவும் பெரியவருமாக அகஸ்டஸ் சீசர் நினைவுகூரப்படுகின்றார். தன்னுடைய அரசியல் செல்வாக்கையும் இராணுவப்படையின் வல்லமையையும் பயன்படுத்தி தன்னுடைய எதிரிகளை அகற்றினார். தன்னுடைய இராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். ரோமாபுரியின் ஒழுங்கற்ற, பழைய, பயனற்ற நிலையை அகற்றி, பளிங்கு கற்களாலான சிற்பங்களும், கோவில்களும் நிறைந்த பட்டணமாக மாற்றினார் போற்றினார். அவரைப் போற்றிய ரோம மக்கள் அவரைத் தேவனுக்குச் சமமான தந்தையாகவும் மனுக்குலத்தை மீட்பவராகவும் போற்றினர். அவருடைய நாற்பது ஆண்டு அரசாட்சி முடிவடையும் தருவாயில் அவருடைய அரசுக்கு அவர் கொடுத்த கடைசி வார்த்தைகள், “நான் ரோமாபுரியை ஒரு களிமண் பட்டணமாகக் கண்டெடுத்தேன். அதனை ஒரு பளிங்கு பட்டணமாக விட்டுச் செல்கின்றேன்” என்பது அவருடைய மனைவியின் கூற்றுப்படி அவரின் கடைசி வார்த்தைகள், “நான் என்னுடைய பணியை நன்றாகச் செய்தேனா? அப்படியாயின் நான் போகும் போது என்னைப் பாராட்டுங்கள்” என்பது.
அகஸ்டஸ் அறியாதது என்னவெனில் ஒரு பெரிய நிகழ்வில் அவருக்கு ஒரு சிறிய பங்கே கொடுக்கப்பட்டது. அவருடைய அரசாட்சியின் மறைவில் ஒரு தச்சனின் மகனாகப் பிறந்த ஒருவர், ரோம இராணுவத்தையும் வெற்றிகளையும், கோவில்களையும், அரங்கங்களையும், அரண்மனைகளையும் காட்டிலும் மிகப் பெரிய ஓர் உண்மையை வெளிப்படுத்தினார் (லூக். 2:1)
அன்று ராத்திரியிலே அவருடைய சொந்த ஜனங்கள் அவரை ரோமப் போர் சேவகர்களால் சிலுவையில் அறையப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டபோது, இயேசு பிதாவிடம் வேண்டிக் கொண்ட மகிமையை எத்தனை பேர் புரிந்து கொண்டிருப்பர்? (யோவா. 17:4-5) பரலோகத்திலும் பூலோகத்திலும் என்றைக்கும் போற்றப்படும் அந்த மறைவான பலியின் அதிசயத்தை யார் தான் முன்னறிந்திருப்பார்கள்?
அது ஒரு முழுமையான நிகழ்வு. நாம் முட்டாள்தனமான கற்பனைகளைத் தொடர்பவர்களாகவும், நமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்பவர்களாகவும் தேவன் நம்மைக் காண்கி;றார். அவர் நாம் அனைவரும் சேர்ந்து அந்த பழமையான சிலுவையைக் குறித்துப் பாடும்படி நம்மை வைத்திருக்கின்றார்.
நமக்குத் தேவையான மகிமை அந்தச் சிலுவையின் மகிமையே.