“ஒவ்வொரு நாளும் கிறிஸ்மஸ்” என்ற புத்தகத்தில் வில்லியம் டீன் ஹோவெல்ஸ் என்பவர் தன்னிடம் வாழ்த்துப் பெறுகின்ற ஒரு சிறு பெண்ணைப் பற்றி சொல்லுகின்றார். ஒரு நீண்ட கொடுமையான ஆண்டின் “ஒவ்வொரு நாளும் கிறிஸ்மஸ்” கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்குப் பின் மூன்றாவது நாளே யூல்மரத்தடிகளில் அனல்மூட்டி அநுபவித்த மகிழ்ச்சி மெலியத் துவங்கிவிட்டது. மிட்டாய்களை யாரும் விரும்பவில்லை. வான்கோழிகள் மிகவும் அரிதானவையாகிவிட்டது. அவற்றின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. பரிசுப் பொருட்கள் எங்கும் குவிந்துகிடப்பதால் அதனை யாரும் நன்றியோடு ஏற்பதில்லை. ஜனங்கள் கோபத்துடன் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிகின்றனர்.
நல்லவேளை, ஹோவெல்ஸின் கதை வெறும் கற்பனையில் தோன்றிய கதை. வேதாகமம் ழுழுவதிலும் தாம் கிறிஸ்துவைப் பற்றி பார்க்கின்றபோதும், கிறிஸ்மஸின் நோக்கம் ஒரு நம்பமுடியாத ஆசீர்வாதம், அது நம்மைச் சோர்வடையச் செய்வதேயில்லை.
இயேசுகிறிஸ்து பிதாவினிடத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, அப்போஸ்தலனாகிய பேதுரு எருசலேம் தேவாலயத்திலுள்ள ஒரு கூட்டத்தினரிடம், “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்” (அப். 3:22, உபா. 18:18) என்று மோசே முன்னறிவித்தார் எனவும் தேவன் ஆபிரகாமிடம், “உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வசம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்” என வாக்களித்தார், இவையெல்லாம் இயேசுவையே குறிப்பிடுகின்றன எனவும் எடுத்துரைத்தார் (அப். 3:25, ஆதி. 22:18) மேலும் பேதுரு, “சாமுவேல் முதற்கொண்டு எத்தனை பேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ அத்தனை பேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள். அதாவது மேசியாவின் வருகையைக் குறித்து முன்னறிவித்தார்கள் (அப். 3:24) எனவும் கூறினார்.
நாமும் கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் முடிந்த பின்னரும் அந்த மகிழ்ச்சியை அந்த வருடம் முழுவதும் காத்துக் கொள்வோம். கிறிஸ்துவை நாம் வேதாகமம் முழுவதிலும் காண்கிறதால் ஏதோ ஒரு நாளைப் போன்றல்லாமல் கிறிஸ்மஸ் எத்தனை முக்கியமானது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.
இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு பண்டிகை முடிந்து அலங்காரப் பொருட்களை எடுத்துக்கட்டிவைக்கும் போது கிறிஸ்மஸ் மகிழ்ச்சியையும் சேர்த்துக் கட்டிவைத்துவிடாதீர்கள்.