எங்கள் வீட்டிற்கு மேலுள்ள ஆகாயத்தில் மூன்று போர் ஜெட் விமானங்கள் அலறிக்கொண்டு வானத்தில் ஒழுங்காக, மிகக் குறுகிய இடைவெளியில் பறந்தன. அவை பார்ப்பதற்கு ஒன்று போல தெரிந்தது. “வாவ்” என நான் என் கணவன் டானிடம் கூறினேன். “கண்ணைக் கவர்வதாகவுள்ளது” என அவர் ஆமோதித்தார். நாங்கள் ஒரு விமானப்படை தளத்தினருகில் வசிப்பதால் இதுபோன்ற காட்சிகளைக் காண்பது எங்களுக்குப் புதிதல்ல.

ஒவ்வொரு முறையும் இந்த ஜெட் விமானங்கள் எங்களுக்கு மேல் பறக்கும் போது நான் அதே கேள்வியையே கேட்கின்றேன். எப்படி அவைகளால், தங்கள் கட்டுப்பாட்டை இழக்காமல் இத்தனை நெருக்கமாகப் பறக்க முடிகிறது? ஒரு வெளிப்படையான காரணமென்னவெனில் தாழ்மை என தெரிந்து கொண்டேன். வழிநடத்தும் முதல் விமானி தகுந்த, சரியான வேகத்தில், சரியான பாதையில் செல்கின்றார் என்ற நம்பிக்கையோடு, மற்ற இரு விமானிகளும் தாங்கள் செல்லும் திசையைக் குறித்து எந்த தனிப்பட்ட விருப்பத்தையும் மேற்கொள்ளாமலும், தலைவன் செல்லும் பாதையைக் குறித்து எந்தக் கேள்வியையும் கேட்காமலும் பின்பற்றுகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் அனிவகுப்பில் நிலைத்திருந்து நெருக்கமாகத் தொடர்கின்றனர். அதன் விளைவு, நான் ஒரு வலிமையான குழு.

இயேசுவைப் பின்பற்றுபவர்களும் இவர்களைப் போன்றெ தான். “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக். 9:23) என இயேசு சொல்கின்றார்.

தன்னை வெறுத்தலும், பாடுகளும் நிறைந்தது அவருடைய பாதை. அது பின்பற்றக் கடினமானது. ஆனால், அவருடைய உண்மையான சீடனாக இருக்க, நாமும் நம்முடைய தனிப்பட்ட ஆசைகளை தள்ளிவிட்டு, நம்மையே கவனித்துக்கொண்டிருப்பதை விட்டு விட்டு, ஆவியின் பாரத்தைச் சுமந்து கொண்டு அநுதினமும் பிறருக்கு ஊழியம் செய்ய அழைக்கப்படுகின்றோம். அப்படியே நாம் அவரை மிக நெருக்கமாகத் தொடர வேண்டும்.

நம்மையே தாழ்த்தி, அவரோடு நெருங்கி நடப்பது எத்தனை அருமையானக் காட்சி! அவர் நம்மை வழிநடத்த நாம் அவரோடு நெருங்கி, நாமும் அவரும் ஒன்றாயிருப்பது போல நடக்க வேண்டும். அப்படியானால், பிறர் நம்மை காண மாட்டார்கள் ஆனால், கிறிஸ்துவைக் காண்பார்கள். அப்படியிருக்கும் போது பிறர் நம்மைக்காண பார்த்து “வாவ்” என்பர்.