1936 ஆம் ஆண்டு பாடலாசிரியர் பில்லி ஹில் என்பவர் ஒரு பிரபல்யமான பாடலை வெளியிட்டார். அது “அன்பின் மகிமை” என்ற பாடல். சில ஆண்டுகளுக்குமுன், அன்பினால் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் சிறிய காரியங்களால் ஏற்படும் மகிழ்ச்சியைக் குறித்து ஒரு நாட்டினர் பாடிக் கொண்டிருந்தனர். ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், பாடலாசிரியர் பீட்டர் சீற்ரா இதே தலைப்பில் அதிக உணர்வுபூர்வமான பாடல் ஒன்றை எழுதினார். அவருடைய கற்பனையில் இருவர் நீடித்து வாழ்வதாகவும், அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டவர்களாகவும், எல்லாவற்றையும் அன்பின் மகிமைக்காகச் செய்ததாகவும் எழுதினார்.
வேதாகமத்தின் கடைசி புத்தகமான வெளிப்படுத்தலில் ஒரு புதிய அன்புப் பாடல் விளக்கப்பட்டுள்ளது. அது ஒரு நாள் புவியிலும் பரலோகத்திலுமுள்ள அனைவராலும் பாடப்படும் பாடல் (வெளி. 5:9,13). அந்தப் பாடலின் இசை ஆரம்பத்தில் ஒரு துயரத்தொனியோடு ஆரம்பிக்கின்றது. பூமியில் காண்கின்ற அநியாயங்கள் ஒன்றிற்கும் பதிலேயில்லை என்பதைக் கண்ட யோவான், இதை எழுதியவர் அழுகின்றார் (வச. 3-4). ஆனால், உண்மையான மகிமையையும் உண்மை அன்பின் கதையையும் தெரிந்து கொண்டபோது யோவானின் முகம் பிரகாசிக்கின்றது. அந்த பாடலின் இசை உச்சக் கட்டத்தை எட்டுகின்றது (வச. 12-13). படைப்புகளெல்லாம் வல்லமையுள்ள யூதா கோத்திரத்துச் சிங்கத்தைப் போற்றிப் பாடுகின்றன (வச. 5) அவர் நம்மை மீட்பதற்காக தன்னையே ஓர் ஆட்டுக்குட்டியைப் போல பலியிடப்படும்படி அன்பினால் அர்ப்பணித்தார். எனவே வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழுள்ள சிருஷ்டிகளும், சமுத்திரத்திலுள்ள யாவும் அவரை வணக்கமாய் பணிந்து கொண்டன (வச. 13).
ஒரு சிறிய அன்பின் செயலை பாடலாகப் பாடும் போது அது இதுவரைப் பாடப்பட்ட பாடல்களிலெல்லாம் அனைவரையும் அசைக்கும் பாடலாகத் திகழ்கின்றது. நாம் பாடும் மகிமையின் பாடல் யாவும் தேவனுடைய உள்ளத்தை வெளிப்படுத்துகின்றன. நாம் அவரைப் பாடுகின்றோம், ஏனெனில், அவரே பாடலைத் தந்தவர்.
என்னென்ன அன்பின் செயல்களால் தேவனுக்கு மகிமையை செலுத்தப் போகின்றோம்?