பழுதாகிவிட்ட எங்களுடைய காரைச் சரிசெய்ய வந்துள்ள மனிதன் பார்ப்பதற்கு இளமையாகவும், எங்கள் பிரச்சனையைச் சரி செய்யத் தகுதியற்றவனுமாக எனக்குத் தோன்றினான். என்னுடைய கணவன் டான். “அவன் ஒரு குழந்தை” என்று என்னுடைய காதில் முணுமுணுத்து, தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தினார். அந்த இளைஞனின் மீதுள்ள நம்பிக்கையின்மை, நாசரேத்தூரிலுள்ள மக்கள் இயேசுவை சந்தேகத்தோடு பார்த்து முணுமுணுத்துக் கொண்டதைப் போலிருந்தது.
இயேசு ஜெப ஆலயங்களில் போதனை செய்த போது “இவன் தச்சனுடைய மகன் அல்லவா?” எனக் கேட்டனர் (மத். 13:55). அவர்கள் ஏளனமாய் பேசிய போதும், அவர்களறிந்த ஒரு நபரால் எப்படி சுகமளிக்கவும், போதகம் செய்யவும் முடிகிறது என ஆச்சரியப்பட்டனர். “இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?” (வச. 54) எனக் கேட்டனர். அவர் செயல்படுத்திய அதிகாரத்தைக் கண்டு, இயேசுவை விசுவாசிப்பதற்குப்பதிலாக இடறலடைந்தனர் (வச. 15,58).
இதேப்போல் நாமும் நம்முடைய ரட்சகரின் ஞானத்தையும், வல்லமையையும் நம்புவதற்கு கஷ்டப்படுகின்றோம். சிறப்பாக, நம்முடைய அநுதின வாழ்வில் நன்கு பழகிய சாதாரண காரியங்களில் கூட நம்பிக்கையையிழந்து விடுகிறோம். அவருடைய உதவியை நாடாமல், நம் வாழ்வு மாற்றத்தைத் தரும் அற்புதத்தை நாம் இழந்துவிடுகிறோம் (வச. 58).
டான், தான் எதிர்பார்த்த உதவி சரியாகத் தன்னை அடைந்ததைக் கண்டான் இறுதியாக, என்னுடைய கணவன் அந்த இளைஞனின் உதவியை ஏற்றுக்கொள்ள சம்மதித்து, தன்னடைய பழைய காரின் பாட்டரியையும் பார்க்கும்படி அவனை அனுமதித்தார். ஒரேயொரு இணைப்பை இறுக்கிய அந்த மெக்கானிக், நொடியில் அந்தக் காரை ஒடவிட்டார். அதன் இயந்திரம் உறும, எல்லா விளக்குகளும் எரிய ஆரம்பித்தன. “இது கிறிஸ்மஸ் போல ஜொலிக்கிறது” என்றார் என் கணவன்.
இதேப் போன்று மேசியா நம் வாழ்விலும் புதிய ஒளியையும், ஜீவனையும் தந்து நாம் அவரோடு நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர உதவுவார் என எதிர்பார்ப்போம்.
தேவன் நம் வாழ்வைக் கையாளுகின்றார், அது அவராலேயே முடியும் என்பதை என்னென்ன நடைமுறை வழிகளில் உனக்கும் பிறருக்கும் நினைப்பூட்டப்போகின்றாய்?