நாள் காட்டியில் டிசம்பர் மாதத்திற்குத் திருப்புவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே, கிறிஸ்மஸ் மகிழ்ச்சி எங்கள் வடக்கு பட்டணத்தில் வெளிப்படத் துவங்கி விடும். ஒரு மருத்துவ அலுவலகத்திலுள்ள மரங்களும், செடிகளும் வண்ண விளக்குகளாலும், மின் விளக்குகளின் சரங்களாலும் வெவ்வேறு வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டன. இரவு நேரத்தில் அந்தப் பகுதியின் ஒளிமயம் அனைவரையும் பிரமிக்கச் செய்வதாயிருந்தது. மற்றொரு வர்த்தக நிறுவனம் தங்கள் கட்டடங்களை ஆடம்பரமாகப் பொதியப் பெற்ற கிறிஸ்மஸ்  பரிசுபோல அலங்கரித்துள்ளது. எங்கு திரும்பினாலும் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. கிறிஸ்மஸ்கால விற்பனைகளும் துவங்கியிருந்தன.

சிலர் இத்தகைய ஆடம்பர வெளிப்படுத்துதலை விரும்புகின்றனர். வேறுசிலர் இதனை அதிருப்பியோடு பார்க்கின்றனர். ஆனால், மற்றவர்கள் கிறிஸ்மஸை எப்படிப் பார்க்கின்றனர். என்பது கேள்வியல்ல. நாம் ஒவ்வொருவரும் இந்த கொண்டாட்டத்தை எப்படி கருதுகிறோம் என்பதே நமது சிந்தனை.

இயேசுவின் பிறப்பிற்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இயேசு தன்னடைய சீடர்களிடம், “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார் (மத். 16:13). அதற்கு அவர்கள், சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்க தரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறதார்கள் என்று பதிலளித்தனர். அப்பொழுது இயேசு, “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று தனிப்பட்ட கருத்தைக் கேட்கின்றார் (வச. 15). அதற்குக் பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான் (வச. 16).

இந்த ஆண்டும் அநேகர் இந்தக் குழந்தையாரென்ற உண்மையைத் தெரிந்து கொள்ளாமலே கிறிஸ்மஸைக் கொண்டாடலாம். நாம் மற்றவர்களோடு உரையாடும் போது அவர்களிடம் அக்கேள்வியைக் கேட்பதன் மூலம் அவர்களும் இயெசுவைத் தெரிந்துகொள்ள உதவுவோம். கிறிஸ்மஸ் என்பது மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஒரு குழந்தையைப் பற்றி மகிழ்ச்சிதரும் கதையா? அல்லது நம்மைப் படைத்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளைப் பார்க்கும்படி நம்மில் ஒருவராக வந்துள்ளரா?