Tamil Reading plan - Letting go of anger - day 1
பேசும்முன் யோசி
கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். சங்கீதம் 141:3
தன் மனைவி பிரபலமான ஹோட்டலுக்குப் போகும் வழியை சரிவரக் கண்காணிக்காததால் அங்கு போக இயலாததால் செங் மன அமைதியை இழந்தான். அவர்கள் குடும்பமாக ஜப்பானைச் சுற்றிப் பார்த்து விடுமுறையைக் கழித்து, வீடுதிரும்புமுன் கடைசியாக அந்தப் பிரபல ஹோட்டலில் திருப்தியாக உணவு உண்ண திட்டமிட்டிருந்தனர். இப்பொழுது கால தாமதத்தால் உணவருந்தாமல் விமான நிலையத்திற்குச் செல்லவேண்டியதாயிற்று. ஏமாற்றமடைந்த செங் , கவனமாகத் திட்டமிடாததற்காகத் தன் மனைவியைக் குறைகூறினான்.
பின்பு…
Forgiveness Day1
மன்னிக்கும் கலை
எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான் - லூக்கா 15:20
ஒரு மதியநேரம், தகப்பனும் இரண்டு மகன்களும்: மன்னிக்கும் கலை எனும் தலைப்பில் அமைந்த கலைக்கண்காட்சி ஒன்றில் இரண்டு மணிநேரம் செலவிட்டேன். இயேசு சொன்ன கெட்ட குமாரன் (லூக். 15:11-31) உவமையே அதன் கருபொருள். மற்ற சித்திரங்களை காட்டிலும் என்னை எட்வர்டு ரியோஜாஸ் அவர்களின், “கெட்ட குமாரன்” கலைவண்ணம் அதிகமாய் கவர்ந்தது. முன்னொரு நாளில் வீட்டைவிட்டு…
ஞானத்தின் ஊற்றுக்கண்
ஒரு பெண் தன்னுடைய நாயை வைத்திருப்பதாக ஒரு மனிதன் அந்தப் பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். நாய் அந்த மனிதனுடையதாக இருக்கமுடியாது என்றும், அதை எங்கே வாங்கினாள் என்றும் அந்தப்பெண் நீதிபதியிடம் கூறினாள். நீதிமன்ற அறையில் நீதிபதி நாயை அவிழ்த்து விட்டபோது, அதன் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெளிவாகத் தெரிந்தது. தன் வாலை ஆட்டியபடி, நாய் அந்த மனிதனிடம் ஓடியது!
இதேபோன்ற ஒரு பிரச்சனையை, பண்டைய இஸ்ரவேலில் நீதிபதியாக இருந்த சாலொமோன் தீர்த்துவைக்க நேர்ந்தது. ஒரு ஆண் குழந்தைக்கு தான்தான் தாய் என்று இரண்டு பெண்கள் உரிமை கோரினார்கள். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட சாலொமோன், பிள்ளையை இரண்டாகப் பிளந்துகொடுக்க ஒரு பட்டயத்தைக் கொண்டுவரச் சொன்னார். உண்மையான தாய், தன் குழந்தை தனக்குக் கிடைக்காதபோதும், அவன் உயிரைக் காப்பாற்றும்படியாக, அவனை அடுத்த பெண்ணிடம் கொடுக்கும்படி கூறினாள். சாலொமோன் அந்தக் குழந்தையை அவளுக்கே கொடுத்தார்.
எது நியாமானது, எது ஒழுக்கமானது, எது சரி, எது தவறு என்று முடிவெடுக்க நமக்கு ஞானம் அவசியம். ஞானத்தின் அவசியத்தை நாம் முழுவதுமாக உணர்ந்தால், நாமும் சாலொமோனைப் போல, ஆண்டவரிடம் ஞானமுள்ள இருதயத்தைக் கேட்கலாம் (வச. 9). மற்றவர்கள் விருப்பங்களையும் கருத்தில்கொண்டு, நம்முடைய தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்திசெய்ய தேவன் நமக்கு உதவுவார். நம் வாழ்க்கையில் அவரை கனப்படுத்தும்படியாக, சில சமயங்களில் குறுகியகால பலன்களையும், நீண்டகால (சில சமயங்களில் நித்திய) பலன்களையும் ஒப்பிட்டுப் பார்க்கச்செய்வார்.
நம் ஆண்டவர் ஒரு நேர்த்தியான நீதிபதி மட்டுமல்ல, அதிக ஞானத்தைத்தர ஆர்வமாக இருக்கும் தனிப்பட்ட ஆலோசகருமாவார் (யாக். 1:5).
இப்போதும் ராஜாதான்
“கிறிஸ்தவர்களுக்கு அநேக வருடங்களில் இது ஒரு கொடிய நாள்” என்று ஒரு செய்திக்குறிப்பு கூறியது. ஏப்ரல் 2017ல் ஞாயிறு ஆராதனையில் ஈடுபட்டிருந்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஆராதனை நடைபெறும் இடத்தில் நடத்தப்படும் கொடூர இரத்தம் சிந்துதலையும், தாக்குதல்களையும் நம்மால் வகைப்படுத்தவும் முடியாது. ஆனால் இதுபோன்ற துன்பங்களை அனுபவித்தவர்களிடம் நாம் உதவி பெறமுடியும்.
ஆசாப் சங்கீதம் 74ஐ எழுதியபோது, எருசலேமின் பெரும்பான்மையான மக்கள் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் அல்லது புகலிடம் தேடி பிற இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தன் மன சஞ்சலத்தை வெளிப்படுத்திய அவர், இரக்கமற்ற அன்னியப் படைகளால் நாசப்படுத்தப்பட்ட தேவாலயத்தைப்பற்றி விவரித்தார். “உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்,” என்று ஆசாப் குறிப்பிட்டார் (வச. 4). “உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள்” (வச. 7).
அந்த மோசமான சூழலிலும் சங்கீதக்காரன் நிற்பதற்கு ஒரு இடத்தைக் கண்டுகொண்டான். நாமும் அதேபோல் செய்ய ஊக்குவிக்கப்படுகிறோம். “பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா” என்று கூறுகிறார் (வச. 12). இந்த உண்மையை உணர்ந்துகொண்டதால், அந்த்த் தருணத்தில் தேவனின் இரட்சிப்பு இல்லாததுபோல் தோன்றினாலும், ஆசாப்பால் கர்த்தரின் வல்லமையைத் துதிக்கமுடிந்தது. “உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்” என்று ஆசாப் ஜெபித்தார். “துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும், சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்” (வச. 20-21).
நியாயமும், கிருபையும் இல்லாததுபோல் தோன்றும்போது, தேவனின் அன்பும், வல்லமையும் கடுகளவும் குறைவதில்லை. ஆசாப்போடு “தேவன் என்னுடைய ராஜா” என்று நாமும் நம்பிக்கையோடு சொல்லலாம்.
உங்கள் நகரத்தைப் பாருங்கள்
“நாங்கள் பார்க்கும்விதமாக எங்கள் நம் நகரத்தைப் பாருங்கள்.” மிஷிகனின் டெட்ராய்ட் நகரில் செயல்படும் நகர வளர்ச்சிக் குழு தங்கள் நகரின் எதிர்காலம் குறித்த திட்டத்தை ஆரம்பிக்க இந்த வாசகத்தை உபயோகித்தது. ஆனால் இந்த பிரச்சாரத்தில் ஒரு முக்கியமான அம்சம் இல்லை என்பதை அந்த ஊர் மக்கள் உணர்ந்தபோது, அந்தத் திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள் நகரின் ஜனத்தொகை மற்றும் பணியாளர்களில் பெரும்பான்மையானவர்கள். ஆனால் தாங்கள் பார்க்கும்விதமாக நகரைப் பார்க்கச் சொன்ன அந்தப் பிரச்சாரம் குறித்த விளம்பரங்களிலும், சுவரொட்டிகளிலும் தெரிந்த அநேக முகங்களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இடம்பெறவே இல்லை.
இயேசுவின் நாட்டில் இருந்தவர்களுக்கும் எதிர்காலம் குறித்து ஒரு குறுகிய மனப்பான்மை இருந்தது. ஆபிரகாமின் சந்ததியினராக, அவர்கள் யூத மக்களைக்குறித்து மட்டும் அக்கறை கொண்டிருந்தார்கள். சமாரியர்கள், ரோமப் போர்ச்சேவகர்கள், அல்லது தங்களை ஒத்த குடும்பப்பின்னணி இல்லாதவர்கள், மதகுருக்கள் அல்லது ஆராதனையைப் பின்பற்றாதவர்கள் குறித்து இயேசு கொண்டிருந்த அக்கறையை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
டெட்ராய்ட், எருசலேம் மக்களின் குறுகிய மனப்பான்மை எனக்குப் புரிகிறது. யாருடைய வாழ்க்கை அனுபவங்கள் எனக்குப் புரிகிறதோ அவர்களை மட்டுமே நானும் பார்க்கிறேன். ஆனால் நம்முடைய வேறுபாடுகள் மத்தியில் நம்மில் ஒற்றுமையை எப்படி ஏற்படுத்துவது என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார். நாம் நினைப்பதைவிட நாம் ஒரேவிதமாக இருக்கிறோம்.
உலக மக்கள் அனைவருக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தர, ஆபிராம் என்று பேர்கொண்ட ஒரு பாலைவன நாடோடியை நம் ஆண்டவர் தெரிந்துகொண்டார் (ஆதியாகமம் 12:1-3). நமக்கு இதுவரை தெரியாத அல்லது நேசிக்காத அனைவரையும் இயேசு அறிந்திருக்கிறார், நேசிக்கிறார். நாம் ஒருவரை ஒருவரும், நமது நகரங்களையும், அவர் ராஜ்யத்தையும், அவர் பார்க்கும்விதமாக நாமும் பார்க்க உதவும் தேவனின் இரக்கத்தாலும், கிருபையாலும் நாம் வாழ்கிறோம்.