Archives: நவம்பர் 2018

தந்தைகளும், மகன்களும்

என் தந்தை ஒரு நல்ல தகப்பனாக நடந்துகொண்டார். பெரும்பாலான விஷயங்களில் நானும் ஒரு கடமை உணர்ச்சி உள்ள மகனாக நடந்துகொண்டேன். ஆனால், என் தந்தையை ஒரு விஷயத்திற்காக நான் ஏங்கவைத்தேன்: எனக்காக. அவர் ஒரு அமைதியான மனிதர். நானும் அதேபோல் அமைதியாக இருப்பேன். நாங்கள் இருவரும் அருகருகே பல மணி நேரம் வேலை பார்ப்போம். ஆனால், ஒரு வார்த்தைகூட பேசியிருக்க மாட்டோம். என்னுடைய உள்ளான விருப்பங்களையும், கனவுகளையும், நம்பிக்கைகளையும், பயங்களையும் நான் ஒருபோதும் அவரிடம் சொன்னதில்லை; அவரும் கேட்டதில்லை.

சிறிது காலத்தில் என்னுடைய மவுனம் என்னை வாதித்தது உரைத்தது. ஒருவேளை என் முதல் மகன் பிறந்த சமயம் அதை நான் உணர்ந்திருக்கலாம். அல்லது ஒருவர் பின் ஒருவராக என் மகன்கள் வளர்ந்து வீட்டை விட்டுப் போனபோது உணர்ந்திருக்கலாம். இன்னும் ஒரு நல்ல மகனாக நான் இருந்திருக்க வேண்டும் என்று இப்போது யோசிக்கிறேன்.

எத்தனை விஷயங்களை என் தகப்பனிடம் சொல்லியிருக்கலாம் என்று இப்போது யோசிக்கிறேன். என்னென்ன விஷயங்கள் அவர் என்னிடம் சொல்லியிருக்கலாம் என்றும் யோசிக்கிறேன். அவருடைய அடக்க ஆராதனையில், என்னுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறி அவர் உடல் அருகில் நின்றுகொண்டிருந்தேன். “இப்போது கால தாமதமாகி விட்டது. அப்படித்தானே?” என்று என் மனைவி அமைதியாகக் கேட்டாள். “ஆம் அப்படித்தான்”

இவை அனைத்தையும் பரலோகத்தில் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையில் நான் ஆறுதல் அடைகிறேன். ஏனென்றால் அங்கேதானே கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார் (வெளி. 21:4).

இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு மரணம் அன்பை முடிவுக்குக் கொண்டுவருவதில்லை. மாறாக, மனத்தாங்கல்கள் இல்லாத நித்திய வாழ்க்கைக்கான ஆரம்பம்தான் மரணம்; உறவுகள் சீர்படுத்தப்பட்டு அன்பு நித்தியமாக வளரும். அங்கே பிதாக்களுடைய இருதயம் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயம் அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திரும்பும் (மல்கியா 4:6).

என் செயலுக்காக வருந்துகிறேன்

காலின்ஸ் என்பவர் 2005ல் ஒரு அறிக்கையை வேண்டுமென்றே தவறாக திரித்து எழுதியதால், மெக்கீ என்பவர் நான்கு ஆண்டுகள் சிறைக்கு செல்லவேண்டியதாயிற்று. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் காலின்ஸை “துன்புறுத்த வேண்டும்” என்று மெக்கீ சபதம் எடுத்தார். மெக்கீ மேல் எந்தத் தவறும் இல்லை என்று தீர்ப்பாகி சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அனைத்தையும் இழந்துவிட்டார். இதற்கிடையில் காலின்ஸ் இதுபோல் தவறாகத் தயார் செய்த அறிக்கைகள் பற்றித் தெரிய வந்ததால், அவர் வேலை பறிக்கப்பட்டு, அவரும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால் இருவருமே சிறையில் இருக்கும்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்.

இரண்டு பேருமே நம்பிக்கை சார்ந்த ஒரே நிறுவனத்தில் வேலை செய்வது 2015ல் தெரியவந்தது. “நான் செய்த காரியத்துக்காக வருத்தப்படுகிறேன் என்று சொல்வதைத் தவிர என்னால் எந்தவிதமான விளக்கமும் அளிக்கமுடியாது,” என்று மெக்கீயிடம் சொன்னதாக காலின்ஸ் பின்னர் கூறினார். “அதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று கூறிய மெக்கீ, காலின்ஸை மன்னித்தார். இருவருமே ஆண்டவரின் விலைமதிக்க முடியாத அன்பையும், “கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (கொலோசேயர் 3:13)என்று கற்றுத்தரும் தேவனின் மன்னிப்பையும் அனுபவித்ததால், சமரசம் செய்துகொள்ள முடிந்தது.  

இப்போது அவர்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். “ஒருவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், உங்கள் இறுமாப்பைப் புறந்தள்ளிவிட்டு மன்னிப்பு கேளுங்கள் என்று உலகத்தாருக்குச் சொல்வதே எங்கள் இருவரின் கூட்டுக் குறிக்கோளாக இருக்கிறது” என்று காலின்ஸ் கூறினார். “யார் மீதாவது உங்களுக்கு வருத்தம், கோபம் இருந்தால், அந்த கசப்பான உணர்ச்சிகளை விட்டுத் தள்ளுங்கள்; ஏனென்றால் அது அவர்களைக் காயப்படுத்துவதாக நினைத்து நீங்கள் விஷம் குடிப்பது போன்றதாகும்.”

தேவன் தம்மை விசுவாசிப்பவர்களை அமைதியிலும், ஒருமைப்பாட்டிலும் வாழும்படி சொல்கிறார். நமக்கு “யார் மீதாவது மனஸ்தாபம்” இருக்குமென்றால், அதை நாம் தேவனிடம் சொல்லிவிடலாம். அவர் சமரசம் செய்வார் (வச. 13-15; பிலிப். 4:6-7)

பல் மருத்துவமனையில் வெளிப்பாடு

பிதாவின் இருதயத்தைக் குறித்த தீர்க்கமான ஒரு போதனையை பல் மருத்துவமனையில் நான் எதிர்பார்க்கவில்லை, ஆனாலும் கிடைத்தது. என் பத்து வயது மகனை அங்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவனுடைய பால் பல் ஒன்று விழுவதற்கு முன்பே, அதனடியில் புது பல் முளைக்க ஆரம்பித்திருந்த்து. பால் பல்லை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

“அப்பா, இதற்கு வேறு வழியே இல்லையா? கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க முடியாதா? இந்தப் பல்லை பிடுங்க வேண்டாம்பா,” என்று என் மகன் கண்ணீரோடு என்னிடம் கெஞ்சினான். எனக்கு அதிகக் கஷ்டமாக இருந்தாலும், “இல்லை, மகனே, அதை எடுத்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை” என்று கூறினேன். பல் மருத்துவர் மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பல்லைப் பிடுங்கும்போது, அவன் வேதனையில் துடித்ததால், நானும் கண்ணீரோடு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அவன் வலியை நீக்க என்னால் முடியாது. அவன் அருகில் இருப்பது மட்டுமே என்னால் முடிந்த காரியம்.

அந்தத் தருணத்தில் கெத்சமனே தோட்டத்தில் இயேசு பிதாவிடம் மன்றாடியது என் நினைவுக்கு வந்தது. தனக்குப் பிரியமான தன் குமாரன் துக்கத்தில் இருப்பது பிதாவை எவ்வளவு மனம் உடையச் செய்திருக்கும். ஆனாலும் அவருடைய ஜனங்களை மீட்க வேறு வழி இல்லை.

நம் வாழ்க்கையில், என் மகன் எதிர்கொண்டதுபோல, நாமும் சில வேளைகளில் தவிர்க்க முடியாத, வேதனையான தருணங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியின் மூலமாக இயேசு நமக்காக இடைபடுவதால், எப்போதும், நம்முடைய இருண்ட வேளைகளிலும்கூட, நமது அன்பின் பரமபிதா நம்மோடு இருக்கிறார் (மத். 28:20).

Overcoming Worry Day5

பயத்திலிருந்து விடுதலை

நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். - சங்கீதம் 34:4

என் உள்ளத்திற்குள் பயம் என்னை அறியாமல் இரகசியமாக நுழைந்து விடுகிறது. நீ உதவியற்றவன், நம்பிக்கையற்றவன் என்ற நிலையையும் உண்டாக்கி விடுகிறது. என் சமாதானத்தையும், மனதை ஒருமுகப்படுத்தி சிந்திப்பதையும் களவாடி விடுகிறது. நான் எதற்காகப் பயப்படுகிறேன்? என் குடும்பத்திற்காகவும், எனக்கு அருமையானவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும் மிகவும் கரிசனை கொள்கிறேன். பணியை இழக்க நேரிடும்பொழுதும் உறவுகளில் முறிவு ஏற்படும்பொழுதும் திகில் அடைகிறேன். பயத்தை என் உள்ளத்திற்குள்ளேயே பூட்டி…

Overcoming Worry Day4

“நீ விண்ணப்பம் பண்ணினதினாலே”

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். - பிலிப்பியர் 4:6

நீங்கள் உங்கள் கவலைகளைக் குறித்து என்ன செய்வீர்கள்? அவற்றை உங்களுடைய உள்ளத்திற்குள் ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது பரத்துக்கு நேராக திருப்புவீர்களா?

சனகெரிப் எனும் கொடிய அசீரியா தேசத்து ராஜா, எருசலேம் பட்டணத்தை அழித்துப் போடும்படி ஆயத்தம் பண்ணுகையில் எசேக்கியா ராஜாவுக்கு, செய்தி அனுப்பி, பிற தேசங்களைக் கைப்பற்றினது போலவே யூதாவையும் கைப்பற்றுவேன் என்று அறிவித்தான். எசேக்கியா ராஜா, அச்செய்தி அடங்கிய ஓலையை எடுத்துக்கொண்டு,…

Overcoming Worry Day3

நாளைய தினத்தை இன்று பார்ப்பது

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். - 2 கொரிந்தியர் 5:6

மேகங்களற்ற நீல நிற வானத்தை கூர்ந்து பார்ப்பது எனக்குப் பிடிக்கும். நம்முடைய சிருஷ்டிகரின் மகிமையான படைப்புகளில் ஓர் அழகிய பகுதி இந்த வானம். இது நம்முடைய சந்தோஷத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வானத்தைக் கண்டு விமான ஓட்டிகள் எவ்வளவாய் மகிழ்ந்திருப்பார்கள்! அவர்கள் பறப்பதற்கு ஏற்ற சிறந்த வான்வெளியை பல அடைமொழிகளைக் கொண்டு விவரிப்பார்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்தது, “நாளைய தினத்தை நீ இன்றே பார்ப்பது.”

“நாளைய தினத்தை இன்றே…

Overcoming Worry Day2

உங்கள் சுமைகளை இறக்கி வையுங்கள்

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். - மத்தேயு 11:28

ஒருவன் கிராமப்புற சாலையிலே தன்னுடைய சரக்கு வண்டியை ஓட்டி கொண்டு வந்த பொழுது, பெரிய சுமையை சுமந்து வந்த ஒரு பெண்ணைக் கண்டான். வண்டியை நிறுத்தி அவளை அதில் ஏற்றிக்கொண்டான். அப்பெண் நன்றி தெரிவித்துவிட்டு வண்டியின் பின் பகுதியில் ஏறிக்கொண்டாள். சற்று நேரம் கழித்து திரும்பி பார்த்த பொழுது அவன் கண்ட காட்சி அவனை வியப்பில் ஆழ்த்தியது. அப்பெண் வண்டியில் அமர்ந்திருந்தாலும் அவளுடைய…