என் தந்தை ஒரு நல்ல தகப்பனாக நடந்துகொண்டார். பெரும்பாலான விஷயங்களில் நானும் ஒரு கடமை உணர்ச்சி உள்ள மகனாக நடந்துகொண்டேன். ஆனால், என் தந்தையை ஒரு விஷயத்திற்காக நான் ஏங்கவைத்தேன்: எனக்காக. அவர் ஒரு அமைதியான மனிதர். நானும் அதேபோல் அமைதியாக இருப்பேன். நாங்கள் இருவரும் அருகருகே பல மணி நேரம் வேலை பார்ப்போம். ஆனால், ஒரு வார்த்தைகூட பேசியிருக்க மாட்டோம். என்னுடைய உள்ளான விருப்பங்களையும், கனவுகளையும், நம்பிக்கைகளையும், பயங்களையும் நான் ஒருபோதும் அவரிடம் சொன்னதில்லை; அவரும் கேட்டதில்லை.

சிறிது காலத்தில் என்னுடைய மவுனம் என்னை வாதித்தது உரைத்தது. ஒருவேளை என் முதல் மகன் பிறந்த சமயம் அதை நான் உணர்ந்திருக்கலாம். அல்லது ஒருவர் பின் ஒருவராக என் மகன்கள் வளர்ந்து வீட்டை விட்டுப் போனபோது உணர்ந்திருக்கலாம். இன்னும் ஒரு நல்ல மகனாக நான் இருந்திருக்க வேண்டும் என்று இப்போது யோசிக்கிறேன்.

எத்தனை விஷயங்களை என் தகப்பனிடம் சொல்லியிருக்கலாம் என்று இப்போது யோசிக்கிறேன். என்னென்ன விஷயங்கள் அவர் என்னிடம் சொல்லியிருக்கலாம் என்றும் யோசிக்கிறேன். அவருடைய அடக்க ஆராதனையில், என்னுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறி அவர் உடல் அருகில் நின்றுகொண்டிருந்தேன். “இப்போது கால தாமதமாகி விட்டது. அப்படித்தானே?” என்று என் மனைவி அமைதியாகக் கேட்டாள். “ஆம் அப்படித்தான்”

இவை அனைத்தையும் பரலோகத்தில் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையில் நான் ஆறுதல் அடைகிறேன். ஏனென்றால் அங்கேதானே கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார் (வெளி. 21:4).

இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு மரணம் அன்பை முடிவுக்குக் கொண்டுவருவதில்லை. மாறாக, மனத்தாங்கல்கள் இல்லாத நித்திய வாழ்க்கைக்கான ஆரம்பம்தான் மரணம்; உறவுகள் சீர்படுத்தப்பட்டு அன்பு நித்தியமாக வளரும். அங்கே பிதாக்களுடைய இருதயம் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயம் அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திரும்பும் (மல்கியா 4:6).