ஒரு புதிய, இளம் தாயாக, என்னுடைய மகளின் முதல் ஆண்டை ஆவணப்படுத்த வேண்டும் என்ற உறுதியோடு இருந்தேன். அவள் எப்படி மாறி இருக்கிறாள், எப்படி வளர்ந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ளும்விதமாக, ஒவ்வொரு மாதமும் அவளைப் புகைப்படம் எடுத்தேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு புகைப்படத்தில், உள்ளூர் விவசாயிடம் வாங்கிய பூசணிக்காயைக் குடைந்து, அதற்குள் அவள் சந்தோஷமாக உட்கார்ந்திருப்பாள். என் மனதுக்கினிய என் மகள், பெரிதாக வளர்ந்த ஒரு பூசணிக்காய்க்குள் இருந்தாள். சில வாரங்களில் பூசணிக்காய் காய்ந்துபோனது, ஆனால் என் மகளோ தொடர்ந்து வளர்ந்தாள்.

இயேசு யார் என்பதை உணர்ந்த பவுல் அதை விவரிப்பதை இந்த புகைப்படம் எனக்கு நினைவுபடுத்தியது. இயேசுவைக்குறித்து நம் இருதயத்தில் இருக்கும் அறிவை, மண்பாண்டத்துக்குள் உள்ள பொக்கிஷத்துக்கு ஒப்பிடுகிறார். “எல்லா பக்கங்களிலும் நெருக்கப்பட்டாலும்” (2 கொரிந்தியர் 4:8), இயேசு நமக்காக செய்தவற்றை நினைப்பது, போராட்டங்கள் மத்தியில் நிலைத்திருக்க நமக்கு உதவுகிறது. தேவனுடைய வல்லமை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுவதால், “கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகாமல்”, நாம் இயேசுவின் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறோம் (வச. 9).

காய்ந்துபோன பூசணிக்காயைப்போல, நம்முடைய சோதனைகளால் நாம் சோர்ந்துபோகலாம். ஆனால் அந்த கடினமான சவால்களுக்கு மத்தியில், இயேசு தரும் சந்தோஷம் நம்மில் பெருக முடியும். நம்முடைய வாழ்க்கையில் செயல்படும் அவரது வல்லமை பற்றிய நமது புரிந்துகொள்ளுதல்தான் பலவீன மண்பாண்டங்களாகிய நம்முடைய உடலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷம். நம்மில் அவர் வல்லமை செயல்படுவதால், கஷ்டங்கள் மத்தியில் நாம் செழித்து வளரமுடியும்.