வீட்டிற்கு வழியைத் தேடுதல்
சில சமயங்களில் வாழ்க்கைப் பயணம் கடினமாக இருக்கும் போது, நாம் பிரமித்து, இந்தக் கஷ்டத்திற்கு முடிவே இல்லையா என்று நினைக்கிறோம். என்னுடைய குடும்ப வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு தருணத்தில், என் மனைவி ஒரு நாள் காலை தியானத்திற்குப் பின் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொண்டாள். 'நாம் இருட்டான வேளையில் கற்றுக் கொள்ளும் பாடத்தை வெளிச்சத்திலும் மறக்கக் கூடாது என்று கர்த்தர்விரும்புகிறார்" என்று கூறினாள்.
பவுலும் அவரோடு இருந்தவர்களும் ஆசியாவில் கொடுமையான துன்பங்களை அனுபவித்ததை விளக்கிய பின், இதேபோன்ற சிந்தனையை பவுல் 2 கொரிந்தியர் 1ல் எழுதுகிறார். எப்படிப்பட்ட இருட்டான தருணங்களையும் ஆண்டவர் சரிசெய்ய முடியும் என்பதை கொரிந்து பட்டணத்தார் அறிந்து கொள்ள வேண்டும் என்று பவுல் விரும்புகிறார். நாங்கள் மற்றவர்களுக்கு ஆறுதல் செய்யத்தக்கதாக, எங்களுக்கு அவர் ஆறுதல் செய்கிறார் (வச. 4) என்று கூறுகிறார். பவுலும் அவரைச் சார்ந்தவர்களும், தாங்கள் எதிர்கொண்ட சோதனைகளின் போது கர்த்தரிடத்தில்கற்றுக் கொண்டவற்றை கொரிந்து பட்டணத்தார் அதேபோன்ற கஷ்டங்களை சந்திக்கும் போது, ஆறுதல்படுத்தவும் ஆலோசனை வழங்கவும் உபயோகப்படுத்தினர். கேட்க விருப்பமுடையவர்
களாய் இருந்தால், தேவன் நமக்கும் கற்றுத் தருகிறார். நம்முடைய சோதனைகளில் நாம் கற்றுக் கொண்டவைகளை மற்றவர்களுக்கு உதவ கற்றுத் தருவதன்மூலம் நம் சோதனைகளில் இருந்து நமக்கு விடுதலை அளிப்பார்.
நீங்கள் இப்போது இருட்டில் இருக்கிறீர்களா? பவுலின் வார்த்தைகளினாலும், அனுபவத்தினாலும் ஊக்கம் அடையுங்கள். இப்போதே ஆண்டவர் உங்களுடைய நடைகளை வழிநடத்துகிறார் என்றும், அவருடைய உண்மைகளை உங்களுடைய இருதயத்தில் பதிக்கிறார் என்றும் நம்புங்கள். இதனால் இதேபோன்ற சூழ்நிலைகளில் உள்ள மற்றவர்களுடன் உங்களால் இதைப் பகிர்ந்து கொள்ள முடியும். நீங்கள் முன்பு அங்கே இருந்ததால், வீட்டிற்கு வழி உங்களுக்குத் தெரியும்.
வாழ்க்கைப் பயணத்திற்கு பெலன்
கிறிஸ்தவ வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு கதை உயர்ந்த ஸ்தலங்களில் பின்னங்கால்கள் (Hinds Feet on High Places)என்ற உருவகக்கதை, ஆபகூக் 3:19 ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கதை “அதிக-அச்சம்" (Much-Afraid)என்ற கதாபாத்திரம் “மேய்ப்பரோடு" (Shepherd)செல்லும் பயணத்தைப் பற்றியது.
“அதிக-அச்சம்" பயத்தின் மிகுதியால் “மேய்ப்பர்" தன்னை தூக்கிச் செல்லும்படி கேட்கிறாள்.
“நீயாக ஏறி வரட்டும் என்று உன்னை இங்கே விட்டுச் செல்லாமல், உயர்ந்த ஸ்தலங்கள் வரைக்கும் உன்னைத் தூக்கிச் செல்ல என்னால் முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்தால், உன் பின்னங்கால்கள் நன்றாக பலப்படாது. என் துணையாக நான் போகும் இடங்களுக்கு உன்னால் என்னோடு வர முடியாது" என்று மேய்ப்பர் அன்போடு சொல்கிறார்.
பழைய ஏற்பாடு ஆபகூக்குடைய கேள்விகளை (உண்மையைச் சொன்னால், என் கேள்விகளும்கூட) “அதிக அச்சம்" எதிரொலிக்கிறாள், “நான் ஏன் துன்பம் அனுபவிக்க வேண்டும்?" “என் பயணம் ஏன் கடினமாக இருக்க வேண்டும்?"
ஆபகூக் கி.மு. 7 ம் நூற்றாண்டின் இறுதியில், இஸ்ரவேலர் அடிமைகளாவதற்கு முன் யூதாவில் வசித்து வந்தார். இந்த தீர்க்கதரிசி வாழ்ந்த சமுதாயம், சமூக அநீதியை தட்டிக் கேட்காமல் இருந்தது. பாபிலோனியர் எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வரலாம் என்ற பயத்திலேயே வாழ்ந்தார்கள் (ஆப. 1:2-11). ஆண்டவர் தலையிட்டு கஷ்டத்தை நீக்கும்படி ஆபகூக் ஆண்டவரிடத்தில் கேட்டார் (1:13). ஆண்டவர் தன்னுடைய வேளையில் நியாயம் செய்வதாகக் கூறினார் (2:3).
ஆபகூக் விசுவாசத்தில் கர்த்தரைநம்பினார். அந்தக் கஷ்டம் நீங்காவிட்டால் கூட கர்த்தர்தன்னுடைய பெலனாக இருப்பார் என்று இந்த தீர்க்கதரிசி நம்பினார்.
நம் கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள நம் பெலனாக இருந்து ஆண்டவர் உதவி செய்வார் என்பதில் நாமும் ஆறுதல் பெறலாம். கிறிஸ்துவுடனான நம் ஐக்கியத்தை வலுப்படுத்த நமது வாழ்க்கைப் பயணத்தின் கடினமான சவால்களை ஆண்டவர் உபயோகிப்பார்.
அதிகாரி மிக்லியோவின் மனம்
காவல் நிலையத்திற்குத் திரும்பி வந்த அதிகாரி மிக்லியோ களைப்புடன் சுவரில் சாய்ந்து அமர்ந்தார். குடும்ப வன்முறை சம்மந்தப்பட்ட ஒரு அழைப்பை கவனிக்கச் சென்று வந்ததில் அவரது பாதி வேலை நேரம் கடந்துவிட்டது. அதன் பின்விளைவு ஒரு வாலிபனைக் காவலில் வைக்கும்படியாகவும், ஒரு இளம் பெண்ணை மருத்துவ அவசரப் பிரிவில் சேர்க்கும்படியாகவும் இருந்தது. அதிர்ச்சியில் இருந்த அந்தப் பெண்ணின் தாய் இது எப்படி ஆயிற்று என்று கவலைப்பட வைத்தது. இந்த அழைப்பு இளம் அதிகாரி மிக்லியோவை அதிக நாட்கள் பாதித்தது.
'நீ என்ன செய்ய முடியும், விக்" என்று அவருடைய சார்ஜென்ட் அனுதாபத்துடன் கூறினார். ஆனால் அவருடைய வார்த்தைகள் வெறுமையாய் ஒலித்தன. சில காவல் அதிகாரிகளுக்கு வேலையை அலுவலகத்திலேயே விட்டுச் செல்ல முடிந்தது. ஆனால் விக் மிக்லியோவினால் அது போல் முடியவில்லை. அதுவும் இது போன்ற கடுமையான வழக்கினை விட முடியவில்லை.
காவல் அதிகாரி மிக்லியோவின் மனம் இயேசுவின் இரக்கத்தைப் பிரதிபலிக்கின்றது. கிறிஸ்துவின் சீஷர்கள் ஒரு கேள்வியோடு வருகிறார்கள், 'பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான்?" .. இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, 'நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்" (வச. 3) என்று சீஷர்களிடத்தில் கூறினார். பின்பு அவர் சிறுபிள்ளைகளை புண்படுத்துவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார் (வச. 6). சிறுபிள்ளைகள் இயேசுவிற்கு அதிகப் பிரியமாக இருப்பதால் 'அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமூகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்" (வச. 10) என்று அவர் நமக்குச் சொல்லுகிறார்.
சிறுபிள்ளைகள் மேல் அன்பு வைத்த இயேசு நம் மேலும் அன்பு வைத்துள்ளார் என்பது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது. அதனால்தான் சிறுபிள்ளைகளின் விசுவாசத்தோடு, அவருடைய பிள்ளைகளாகும்படி நம்மையும் அழைக்கிறார்.