சில சமயங்களில் வாழ்க்கைப் பயணம் கடினமாக இருக்கும் போது, நாம் பிரமித்து, இந்தக் கஷ்டத்திற்கு முடிவே இல்லையா என்று நினைக்கிறோம். என்னுடைய குடும்ப வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு தருணத்தில், என் மனைவி ஒரு நாள் காலை தியானத்திற்குப் பின் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொண்டாள். ‘நாம் இருட்டான வேளையில் கற்றுக் கொள்ளும் பாடத்தை வெளிச்சத்திலும் மறக்கக் கூடாது என்று கர்த்தர்விரும்புகிறார்” என்று கூறினாள்.

பவுலும் அவரோடு இருந்தவர்களும் ஆசியாவில் கொடுமையான துன்பங்களை அனுபவித்ததை விளக்கிய பின், இதேபோன்ற சிந்தனையை பவுல் 2 கொரிந்தியர் 1ல் எழுதுகிறார். எப்படிப்பட்ட இருட்டான தருணங்களையும் ஆண்டவர் சரிசெய்ய முடியும் என்பதை கொரிந்து பட்டணத்தார் அறிந்து கொள்ள வேண்டும் என்று பவுல் விரும்புகிறார். நாங்கள் மற்றவர்களுக்கு ஆறுதல் செய்யத்தக்கதாக, எங்களுக்கு அவர் ஆறுதல் செய்கிறார் (வச. 4) என்று கூறுகிறார். பவுலும் அவரைச் சார்ந்தவர்களும், தாங்கள் எதிர்கொண்ட சோதனைகளின் போது கர்த்தரிடத்தில்கற்றுக் கொண்டவற்றை கொரிந்து பட்டணத்தார் அதேபோன்ற கஷ்டங்களை சந்திக்கும் போது, ஆறுதல்படுத்தவும் ஆலோசனை வழங்கவும் உபயோகப்படுத்தினர். கேட்க விருப்பமுடையவர்
களாய் இருந்தால், தேவன் நமக்கும் கற்றுத் தருகிறார். நம்முடைய சோதனைகளில் நாம் கற்றுக் கொண்டவைகளை மற்றவர்களுக்கு உதவ கற்றுத் தருவதன்மூலம் நம் சோதனைகளில் இருந்து நமக்கு விடுதலை அளிப்பார்.

நீங்கள் இப்போது இருட்டில் இருக்கிறீர்களா? பவுலின் வார்த்தைகளினாலும், அனுபவத்தினாலும் ஊக்கம் அடையுங்கள். இப்போதே ஆண்டவர் உங்களுடைய நடைகளை வழிநடத்துகிறார் என்றும், அவருடைய உண்மைகளை  உங்களுடைய இருதயத்தில் பதிக்கிறார் என்றும் நம்புங்கள். இதனால் இதேபோன்ற சூழ்நிலைகளில் உள்ள மற்றவர்களுடன் உங்களால் இதைப் பகிர்ந்து கொள்ள முடியும். நீங்கள் முன்பு அங்கே இருந்ததால், வீட்டிற்கு வழி உங்களுக்குத் தெரியும்.