நான் என் தலையைத் தாழ்த்தி, கண்களை மூடி, விரல்களைக் கோர்த்து, ஜெபிக்க ஆரம்பிக்கிறேன். “அன்பின் ஆண்டவரே, உமது பிள்ளையாக இன்று உம்மிடத்தில் வருகிறேன். உமது வல்லமை, உமது நன்மை ஆகியவற்றை ஏற்று, அறிக்கையிடுகிறேன்….” திடீரென்று என் கண்கள் தானாக, வேகமாகத் திறக்கின்றன. நாளை வகுப்பில் கொடுக்கவேண்டிய வரலாற்றுப் பயிற்சியை என் மகன் இன்னும் முடிக்கவில்லை என்ற நினைவு வருகிறது. வகுப்புகள் முடிந்தபிறகு, அவனுக்கு கூடைப்பந்தாட்ட பயிற்சி இருப்பது நினைவு வருகிறது. நடு இரவு வரை கண் விழித்து தன் பள்ளிக்கான பயிற்சிகளை அவன் செய்வதாகக் கற்பனை செய்கிறேன். இதனால் அவன் அதிகக் களைப்பாகி, காய்ச்சலில் படுத்து விடுவான் என்று கவலைப்படுகிறேன்.

ஜெபத்தின்போது ஏற்படும் கவனச் சிதறல்கள் பற்றி, சி. எஸ். லூயிஸ், த ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ் (The Screwtape Letters)என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். நமது மனம் அலைபாயும்போது, மன உறுதியை பயன்படுத்தி, நமது நினைவுகளை மீண்டும் ஜெபத்தை நோக்கி ஒருமுகப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார். ஆனாலும், இந்தக் கவனச்சிதறலை ஏற்றுக்கொண்டு, “நமது கவனச்சிதறலை நமது பிரச்சனையாக தேவனிடம் ஒப்படைத்து, அதையே நமது ஜெபத்தின் மையக் கருத்தாக மாற்றுமாறு” லூயிஸ் ஆலோசனை தருகிறார்.

தீராத கவலை அல்லது பாவகரமான சிந்தனை நம் ஜெபத்திற்குத் தடையாக இருக்கும்போது, கார்தருடானாஉரையாடலில், அதையே பிரதான கருத்தாக எடுத்துக்கொள்ளலாம். நாம் தேவனிடம்பேசும்போது, நமது கவலைகள், பயங்கள், போராட்டங்கள் பற்றி நாம் வெளிப்படையாகப் பேசுவதையே அவர் விரும்புகிறார். நாம் சொல்லும் எதைக் குறித்தும் அவர் ஆச்சரியப்படுவதில்லை. நமது நெருங்கிய நண்பர் நாம் பேசுவதை எப்படி கவனமாகக் கேட்பாரோ அதேபோல் நம்மேல் ஈடுபாடு கொண்டவராக கர்த்தர் இருக்கிறார். அதனால்தான் நம் கவலைகளை அவரிடத்தில் ஒப்புவிக்க ஊக்குவிக்கப்படுகிறோம் – ஏனென்றால் அவர் நம்மை விசாரிக்கிறவர் (1 பேதுரு 5:7).