மதம் மாறி இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நபீல் குரேஷி, தான் விட்டு வந்த மதத்திலுள்ள, தன்னுடைய ஜனங்களை, வாசகர்கள் புரிந்து கொள்ளும்படியாக அநேகப் புத்தகங்களை எழுதியுள்ளார். அவருடைய எண்ணம் மதிக்கத்தகுந்தது. குரேஷியின் உள்ளம் எப்பொழுதும் அவருடைய மக்கள் மீதுள்ள அன்பினை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

இன்னும் இயேசுவின் மீது தன் நம்பிக்கையை வைத்திராத தன்னுடைய அன்பு சகோதரிக்கு, குரேஷி தன்னுடைய ஒரு புத்தகத்தை அர்ப்பணித்தார். அந்த அர்ப்பணம் சுருக்கமாயிருந்தபோதிலும் வல்லமையுள்ளதாயிருந்தது. அதில், “நாங்கள் அனைவரும் இணைந்து இயேசுவை ஆராதிக்கும் நாளைத் தருமாறு தேவனிடம் நான் கெஞ்சுகின்றேன்” என எழுதியிருந்தார்.

ரோமாபுரியிலுள்ள சபைகளுக்குப் பவுல் எழுதிய கடிதத்தை வாசிக்கும் போதும், நாம் இதேப் போன்ற ஓர் உணர்வைக் காண முடிகிறது. “எனக்கு மிகுந்த துக்கமும், இடைவிடாத மன வேதனையும் உண்டாயிருக்கிறது” மேலும், “ மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவை விட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே” (ரோம. 9:1,3) என பவுல் எழுதுகின்றார்.

பவுல் யூத ஜனங்களை மிகவும் நேசித்தார். அவருடைய ஜனங்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படி தான் தேவனை விட்டு பிரிக்கப்படுவதையும் தேர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றார். அவருடைய ஜனங்கள் இயேசுவைத் தள்ளினதின் மூலம் உண்மையான தேவனைத் தள்ளினார்கள் எனத் தெரிந்து கொண்டார். இதன் மூலம் பவுல் தன்னுடைய வாசகர்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை யாவரோடும் பகிர்ந்துகொள்ளும்படி ஊக்குவிக்கின்றார் (10:14-15).

நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் மீதுள்ள அன்பின் நிமித்தம், நாம் படும் வேதனைக்காக நாம் ஜெபத்தில் நம்மை அர்ப்பணிப்போம்.