நான் எதையும் ஒரு குறைவுமின்றி முடிக்க முயற்சித்து அதனால் எல்லாவற்றையும் தள்ளிப்போடும் குணத்தை, என்னுடைய கல்லூரி பேராசிரியர் கண்டறிந்து, எனக்கு ஞானமுள்ள சில ஆலோசனைகளைக் கூறினார். “குறைவற்ற செயல் நன்மைக்கு எதிரியாக அமையும்படி விட்டுவிடாதே” என்றார். ஒரு குறைவில்லாத நிகழ்ச்சியை அமைக்க கடினமாக உழைக்கும்போது, அது நம் வளர்ச்சியைத் தடை செய்கின்றது என்றார். என்னுடைய வேலையிலுள்ள சில குறைபாடுகளை நான் ஏற்றுக் கொள்ளும்போது, அது நான் சுதந்திரமாக வளர்வதற்கு ஒரு வாய்ப்பாகிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் இன்னும் ஆழமான காரணங்களை விளக்குகின்றார். நாம் குறையில்லாதவர்களாக இருக்க சொந்த முயற்சியை எடுக்கும்போது, அந்த இடத்தில் கிறிஸ்துவின் செயல் தேவை என்பதை உணர முடியாதவர்களாகிவிடுகிறோம்.
இதனை பவுலும் கடினமானப் பாதையில் தான் கற்றுக் கொண்டார். பல ஆண்டுகளாக கடினப்பட்டு தேவனுடைய சட்டங்களுக்கு முழுமையாக கீழ்ப்படிய போராடிக் கொண்டிருந்த போது, இயேசுவின் சந்திப்பு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது (கலா. 1:11-16). தேவனுடைய பார்வையில் நம்மைக் குற்றமற்றவர்களாகக் காண்பிக்க நம்முடைய சொந்த முயற்சி போதுமானதாக இருப்பின்
“கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே” (கலா. 2:21) எனப் பவுல் உணர்ந்தார். நம்முடைய சுயத்தை சிலுவையில் அறைந்து மரிக்க ஒப்புக்கொடுக்கும் போது இயேசு அவனுக்குள் வாழ்வதை உணர முடியும் (வச. 20). நம்முடைய குறைவுகளில்தான் தேவனுடைய பூரணப்படுத்துதலை உணரமுடியும்.
ஆதலால் நாம் பாவத்திற்கு எதிர்த்து நிற்க முடியாது என்று அர்த்தமில்லை (வச.7). நாம் ஆவியில் வளர்ச்சியடைவதற்கு நம் சுய பெலத்தைச் சார்ந்திருத்தலை விட்டு விடவேண்டும் என்பதே அதன் பொருள் (வச. 20).
நம் வாழ்நாள் முழுவதும் நாம் வேலை செய்து கொண்டேயிருக்கிறோம். ஆனால், நம்முடைய இருதயம் குறைகளற்ற இயேசுவின் உதவி நமக்கு எப்பொழுதும் தேவை என்பதைத் தாழ்மையோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் இயேசு நம் இருதயத்தில் வாசம் பண்ணுவார் (எபே. 3:17). நீங்கள் அவருடைய அன்பில் வேரூன்றி நிலை பெற்றவர்களாகி சகல பரிசுத்தவான்களோடும் கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து “அறிவுக் கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாக” வேண்டுமென்று வேண்டிக்கொள்கின்றேன் (வச. 17-19).
நாம் இயெசுவின் அன்பில் வளரும்படியான சிலாக்கியம் பெற்றிருக்கிறோம்.