நான் செல்லும் வங்கியில் பணிபுரியும் ஒருவர் தன்னுடைய ஜன்னலின் அருகில் ஷெல்பை கோப்ரா ரோட்ஸ்டர் காரின் புகைப்படத்தை வைத்திருந்தார். (கோப்ரா என்பது போர்ட் கம்பெனியின் ஓர் உயர்தர கார்).

ஒரு நாள் நான் வங்கியில் என்னுடைய தொழில் சம்பந்தமான வேலையை செய்துகொண்டிருந்த போது, நான் அவரிடம் இந்த புகைப்படத்திலுள்ளது. அவருடைய காரா? எனக் கேட்டேன். “இல்லை” என பதிலளித்தார். “அது என்னுடைய பேராவல். நான் ஒவ்வொரு நாள் காலையும் எழுந்து வேலைக்குச் செல்வதே அதற்காகத்தான். ஒருநாள் நான் அந்தக் காரின் சொந்தக்காரனாவேன்” என்றார்.

நான் அந்த இளைஞனின் பேராவலைப் புரிந்து கொண்டேன். என்னுடைய நண்பர் ஒருவர் கோப்ரா கார் வைத்திருக்கின்றார். ஒரு சமயம் நான் அதனை ஓட்டினேன். அது ஒரு சாதாரண இயந்திரம்! உலகிலுள்ள அநேகக் காரியங்களைப் போன்றே கோப்ராவும் ஒன்று. அதற்காகவே வாழ்கின்ற வாழ்க்கை அர்த்தமற்ற ஒன்று, அளவிற்கு விலையேறப்பெற்றதன்று. தேவனை விட்டு விட்டு பிற பொருட்களை நம்புகிறவர்கள் “முறிந்து விழுந்தார்கள்” (சங். 20:8) என சங்கீதக்காரன் குறிப்பிடுகின்றார்.

ஏனெனில், நாம் தேவனுக்கென்று உருவாக்கப்பட்டோம். நம் அனுதின வாழ்வில் நாம் உண்மையென நம்பியிருக்கும் வேறெதுவும் நிலையானதல்ல. நாம் அதையும், இதையும் வாங்குகின்றோம். ஏனெனில், இவை நமக்கு நிரந்தர மகிழ்ச்சியைத் தருமென நாம்’ நினைக்கின்றோம். ஒரு குழந்தையைப் போன்று, ஒரு டஜன் அல்லது அதற்கும் மேலாக கிறிஸ்மஸ் பரிசுகளைப் பெற்றிருந்தாலும் “இவ்வளவு தானா?” என நமக்குள்ளே கேட்கின்றோம். எப்பொழுதும் ஏதோ ஒன்று இல்லாதது போலவே தோன்றுகிறது.

இவ்வுலகிலுள்ள எந்தவொரு மிகச் சிறந்த பொருளாலும் நம்மை முழுவதும் திருப்திப்படுத்த முடியாது. அவற்றில் ஏதோ ஓர் அளவு இன்பம் இருக்கலாம். ஆனால், அந்த மகிழ்ச்சி சீக்கிரத்தில் மறைந்து விடும் (1 யோவா. 2:17) “தேவனிடமிருந்தேயன்றி, வேறோன்றின் மூலமாகவும் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் பெற முடியாது”. அப்படித் தரக் கூடிய ஒரு பொருளும் இல்லை என சி.எஸ். லூயிஸ் கூறுகின்றார்.