“என்னால் செய்ய முடியாது!” என மனச்சோர்வடைந்த ஒரு மாணவன் புலம்பினான். அவன் கையில் வைத்திருந்த தாளின் பக்கத்தில் குறைந்த அளவே எழுதப்பட்டிருந்தது. கடினமான கருத்துக்கள், அத்தோடு மன்னிக்க முடியாத காலக்கெடுவும் கொடுக்கப்பட்டிருந்தது. அவனுக்கு அவனுடைய ஆசிரியரின் உதவி வேண்டியதாயிருந்தது.

நாமும் இயேசுவின் மலைப் பிரசங்கத்தை வாசிக்கும் போது இத்தகைய நம்பிக்கையிழந்த சூழலை உணரலாம். “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்” (மத். 5:44). கோபம் கொலைக்குச் சமம் (வச. 21,22). ஒரு ஸ்தரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று (வச. 28). ஒருவேளை நாம் இத்ததைய தரத்தோடு வாழ முடியும் என நினைப்போமாயின், “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்” (வச. 48).

“மலைப் பிரசங்கம் நமக்குள்ளே விரக்தியை உருவாக்குகின்றது” என ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் சொல்கின்றார். ஆனால், அவர் இதனை நல்லதாகக் கண்டார். ஏனெனில், ‘‘நம்முடைய நம்பிக்கையிழந்து, ஒன்றுமில்லாத நிலையில்தான் நாம் இயேசுவிடம் ஏதாவது பெற்றுக் கொள்ள வருவோம்.”

ஓன்றுமில்லாமையில் தான் தேவன் செயல்படுவதைக் காண்கின்றோம். தங்களால் ஒன்றும் கூடாது என்று புரிந்து கொண்டவர்கள் தான் தேவனுடைய கிருபையைப் பெற்றுக் கொள்கின்றனர். “மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்” (1 கொரி. 1:26-27).

தேவனுடைய ஞானத்தில் நம்முடைய போதகர் நமக்கு இரட்கசர். அவரிடத்தில் நம்பிக்கையோடு வரும்போது “அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும் மீட்புமானார்” (வச. 30). அவரே நமக்கு கிருபையும், அவருக்காக வாழ வல்லமையுமாவார். எனவே தான் அவர், “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது” என்றார் (மத். 5:3).