நான் என் உடைமைகளை அடுக்கிக் கொண்டு லண்டனிலுள்ள என்னுடைய வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது என்னுடைய தாயார் ஒரு பரிசோடு, அவர்களுடைய மோதிரங்களில் நான் மிகவும் விரும்பிய ஒன்றோடு, என்னிடம் வந்தார்கள். “நீ இதை இப்பொழுதே அணிந்துகொள்ள வேண்டும் என நினைக்கின்றேன். நான் மரிக்கும்வரை நீ ஏன் காத்திருக்க வேண்டும்? அது இப்பொழுது எனக்குப் பொருந்தவுமில்லை” என்றார். ஒரு புன்னகையோடு நான் அந்த எதிர்பாராத பரிசை ஏற்றுக் கொண்டேன். சீக்கிரத்தில் கிடைத்த பரம்பரைச் சொத்து எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது.
என்னுடைய தாயார் ஓர் உலகப் பொருளை எனக்குப் பரிசாகத் தந்தார். ஆனால், “பரம’ பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா” என இயேசு நமக்கு வாக்களித்துள்ளார் (லூக். 11:13) பாவத்தால் தம்மைக் கெடுத்துக்கொண்ட பெற்றோர் கூட தன் பிள்ளைகளுக்குத் தேவையானவற்றைக் கொடுக்க அறிந்திருக்கும்போது (மீன் அல்லது முட்டை போன்றவற்றை) நம்முடைய பரமத்தந்தை அவருடைய பிள்ளைகளுக்கு எவ்வளவு அதிகமாகக் கொடுப்பார்? பரிசுத்த ஆவியாகிய கொடையின் மூலம் (யோவா. 16:13) நம்பிக்கை, அன்பு, சந்தோஷம், சமாதானம் ஆகியவற்றை நம்முடைய கஷ்ட நேரங்களில் கொடுப்பார். இந்த ஆவியின் கொடைகளை நாம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வோம்.
நாம் வளர்ந்துவிட்டபோது, நம்முடைய பெற்றோரால் நம்மை முழுவதும் கவனிக்கவும் அன்பு கூரவும் முடியாமல் போகும். நம்முடைய தாயோ, தந்தையோ ஒரு தியாக அன்பின் எடுத்துக் காட்டுகளாகிவிட்டிருக்கலாம். அல்லது நம்முடைய அனுபவம் இவற்றிற்கிடையேயிருக்கலாம். நம்முடைய உலகப் பெற்றோரிடமிருந்து நாம் எதைத் தெரிந்து கொண்டாலும் நாம் நம்முடைய பரமதந்தை மாறாத அன்பைத் தருவதாகக் கூறும் வாக்கைப் பற்றிக் கொள்வோம். அவர் தம்முயை பிள்ளைகளுக்குப் பரிசுத்த ஆவியைப் பரிசாகத் தந்தார்.
நம்முடைய பரம தந்தை நமக்கு நன்மையான ஈவுகளைத் தருகின்றார்.