என் வீட்டிலுள்ள சில காரியங்களை நான் செய்ய முற்படும் போது, அவை பொதுவாக, மற்றொருவரை நான் வேலை செய்யும் போது ஏற்படுத்திய சேதத்தைச் சரி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளும். ஆனால் யு-டியூபில் ஒரு மனிதன் படிப்படியாக செயல்முறை விளக்கம் தந்ததைக் கடைபிடித்து சமீபகாலத்தில் நான் வீட்டு உபயோகப் பொருளொன்றை வெற்றிகரமாகச் சரி செய்து விட்டேன்.
பவுல், தன்னுடைய இளம் சீடருக்கு ஒரு வலிமையான எடுத்துக்காட்டு. தீமோத்தேயு பவுலோடு பிரயாணம் பண்ணி, அவருடைய செயல்களைக் கவனித்தார். ரோமாபுரியிலுள்ள ஒரு சிறைச்சாலையிலிருந்து தீமோத்தேயுவிற்கு நீயோ என் போதகத்தையும், நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும் … துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்” (2 தீமோ. 3:10-11) என எழுதுகிறார். அத்தோடு அவர் தீமோத்தேயுவிடம் ‘‘நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்” (வச. 14-15) எனவும் எழுதுகின்றார்.
நம்முடைய வாழ்வையும் தேவனுடைய வார்த்தையாகிய கற்பாறையின் மேல் கட்டும்படி பவுலின் வாழ்வு நமக்கு ஒரு முன் மாதிரியாக அமைந்துள்ளது. அவர் தீமோத்தேயுவிடம், வேதாகமம் ஒரு வலிமையான, தேவன் தந்த பொக்கிஷம் அதனை அவன் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதாலும், வாழ்ந்து காட்டுவதாலும் தேவனுடைய சீடன் என்பதைக் காட்டுமாறு கூறுகின்றார்.
தேவன் மீதுள்ள நம்பிக்கையில் நாம் வளர, நமக்கு உதவிய தேவனுடைய பிள்ளைகளுக்கு நன்றி கூறும்போது நாமும் அவர்களைப் போன்று சத்தியத்தில் வாழ்ந்து பிறருக்குக் கற்றுக் கொடுப்போம். அவர்களை ஊக்குவிப்போம்.
இதுவே செயல்முறை விளக்கத்தின் வல்லமை.
நாம் தேவனுடைய வார்த்தைகளை போதித்து ஊக்கப்படுத்தும் போது, அவற்றின்படி வாழ்ந்து காட்டவும் அழைக்கப்படுகின்றோம்.