என்னுடைய குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டு என்னிடம் வந்து ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினர். நான் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியே பிரித்து, அவரவர் பிரச்சனையைச் சொல்லும்படி கேட்டேன். இருவரிடமுமே தவறு இருந்தமையால் எங்களின் உரையாடலின் முடிவில் ஒவ்வொருவரிடமும் தன்னுடைய உடன்பிறப்பின் இச்செயலுக்குத் தகுந்த நியாயமான நடவடிக்கை என்ன எடுக்கலாம் என்று கேட்ட போது இருவருமே உடனடியாக ஒரு தண்டனையைக் கொடுக்க வேண்டுமென்று கூறினர். அவர்கள் ஆச்சரியப்படும்படியாக நான் அவரவர் தன் உடன் பிறப்புக்கு எந்த தண்டனையைக் கொடுக்கும்படி விரும்பினார்களோ அதை அவர்களுக்கே கொடுத்தேன். உடனே ஒவ்வொரு குழந்தையும் இது நியாயமற்றது. நாங்கள் மற்றவருக்கு கொடுக்க நினைத்த தண்டனை எங்களுக்கே வந்தது. இது அடுத்தவருக்குத்தான் கொடுக்கப்பட வேண்டிய தண்டனை எனப் புலம்பினர்.
என்னுடைய குழந்தைகள் இரக்கமில்லாத நியாயத் தீர்ப்பைக் காண்பிக்கின்றனர். அதை தேவன் எதிர்க்கின்றார் (யாக். 2:13). பணம் படைத்தவர்களுக்கு அல்லது யாரேனும் ஒருவருக்குப் பாரபட்சமாக நிற்பதைக் காட்டிலும் நாம் பிறரை நம்மைப் போல நேசிக்க வேண்டும் என தேவன் நம்மிடம் விரும்புகிறார் (வச. 8) என்பதை யாக்கோபு நினைப்பூட்டுகின்றார். நாம் பிறரை நம்முடைய சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதும் அல்லது நமக்கு லாபமில்லாத ஒருவரை உதாசீனப்படுத்துவதற்குப் பதிலாக, நாம் எத்தனை அதிகமாக தேவனிடமிருந்து நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைத்து செயல்படுபவராக, நம்முடைய இரக்கத்தை அவர்களுக்குக் காண்பிப்போம் என யாக்கோபு அறிவுரைக் கூறுகிறார்.
தேவன் அவரது இரக்கத்தை நமக்குத் தாராளமாகக் கொடுத்துள்ளார். நாம் மற்றவர்களோடு கொண்டுள்ள தொடர்புகளில் நம் தேவன் நம்மீது காட்டியுள்ள இரக்கத்தை நினைத்து அதனைப் பிறருக்குக் கொடுப்போம்.
தேவனுடைய இரக்கம் நம்மை இரக்கமுள்ளவர்களாயிருக்கத் தூண்டுகிறது.