நாம் அதிக கொந்தளிப்பு பகுதிக்குள் செல்கிறோம் என்பதைத் தெரிவிக்க, விமானி இருக்கை பெல்ட்டை அணிந்து கொள்ளும்படி அறிவிக்கும் அடையாள விளக்கை எரிய விட்டார். தயவு கூர்ந்து உங்கள் இருக்கைகளுக்கு உடனடியாகத் திரும்பிச் சென்று பாதுகாப்பாக உங்கள் இருக்கை பட்டைகளை அணிந்து கொள்ளுங்கள், இந்த எச்சரிப்பை விமானப் பணியாளர்கள் தேவையான போது கொடுக்கின்றனர். கொந்தளிக்கும் காற்றுப் பகுதியில் விமானம் செல்லும்போது இருக்கைப் பட்டை அணியாத பிரயாணிகள் காயப்பட வாய்ப்புள்ளதால், பாதுகாப்போடு தங்கள் இருக்கையில் இருந்தால் அவர்கள் பாதுகாப்பாக கொந்தளிப்புப் பகுதியைக் கடந்து விடலாம்.
அநேகமான நேரங்களில் நாம் கலக்கத்தைத் தரும் அனுபவங்களை நாம் சந்திக்க இருக்கின்றோம் என நம் வாழ்வில் எச்சரிப்பு தரப்படுவதில்லை. ஆனால் நம் அன்புத் தந்தை நம்முடைய போராட்டங்களைத் தெரிந்து, கவனித்து நம்முடைய கவலைகள், காயங்கள், பயங்களை அவரிடம் கொண்டு வரும்படி அழைக்கின்றார். நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல் எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யும் கிருபையை அடையவும் தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் (எபி. 4:15-16) என வேதாகமம் சொல்லுகிறது.
கொந்தளிக்கும் காலங்களில் ஜெபத்தின் மூலம் நம் தந்தையிடம் செல்வதே நாம் செய்யக் கூடிய சிறந்த செயல். நமக்குத் தேவையான போது கிருபை உதவி செய்யும் என்ற சொற்றொடர் சொல்வது அவருடைய பிரசன்னத்தில் நாம் இணைக்கப்பட்டிருந்தால் நம்மை பயமுறுத்தும் வேளைகளில் சமாதானத்துடன் இருக்க முடியும். ஏனெனில் நாம் நம் தேவைகள் எல்லாவற்றையும் பெரியவரிடம் கொண்டு வந்து விட்டோம். வாழ்வின் பிரச்சனைகள் நம்மை மேற்கொள்ளும் போது நாம் ஜெபிக்கலாம். அவரால் மட்டுமே நம் வாழ்வின் கொந்தளிப்பினூடாய் உதவ முடியும்.
நம் வாழ்வில் சோதனைகள் வருவதை நாம் எதிர்பார்க்காவிட்டாலும் நாம் எதிர்நோக்குபவற்றை நன்கு புரிந்து கொண்டுள்ள நம் தந்தையிடம் நாம் ஜெபிக்கலாம்.