ஒரு விளம்பரதாரர், மைக்கேல் ஆஞ்சலோவின் மிகச் சிறந்த படைப்பாகிய, வேதத்திலுள்ள தாவீதின் பளிங்கு சிற்பத்தின் படத்தை மாற்றியமைத்தார். இதனை இத்தாலிய அரசும் அருங்காட்சியகத்தின் அலுவலர்களும் எதிர்த்தனர். தாவீதின் படத்தை ஒரு இராணுவத் துப்பாக்கியை தன் தோளில் தொங்க விட்டிருப்பது போல (ஒரு கவணுக்குப் பதிலாக) சித்தரித்திருப்பது சட்ட விரோதமானது, ”அது அந்தச் சிற்பத்தை சுத்தியலால் உடைப்பதற்குச் சமம் அல்லது அதைவிட மோசம்” என ஒரு கலைத்துறை அலுவலர் சொன்னார்.
முதலாம் நூற்றாண்டில் எருசலேமில் தாவீது ஒரு மேய்ப்பனாகவும், சங்கீதம் எழுதுபவனாகவும், வீரனாகவும், ராஜாவாகவும், இஸ்ரவேலினால் மிகவும் விரும்பப்பட்டவனாகவும், மிகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் நினைவுகூறப்பட்டான். தாவீதின் வம்சாவளியினர் இஸ்ரவேலரின் எதிரிகளைத் தோற்கடிப்பர் என தீர்க்கதரிசிகள் முன் உரைத்திருந்தனர். எனவே பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இயேசு கிறிஸ்துவை தாவீதின் குமாரன் என மக்கள் கூட்டம் வரவேற்றபோது, (மத். 21:6-9) அவர்கள் இயேசு, ஒரு புரட்சி வழி நடத்தி ரோம ஆட்சியைத் தூக்கி எறிவார் என எதிர்பார்த்தனர். ஆனால் இயேசுவோ, தேவாலயத்தில் காசுக்காரரின் பலகைகளை தூக்கி எறிந்து, எல்லா ஜனத்துக்கும் ஜெப வீடு என்றழைக்கப்படும் என் தந்தையின் வீடு என்று அதனை மீட்டார். எனவே இஸ்ரவேல் தலைவர்கள் கொதித்தெழுந்தனர். இத்தகைய ஒரு மேசியாவை, தாவீதின் குமாரனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதையறியாமல், மரண தண்டனையை நிறைவேற்றும்படி ரோமர்களிடம், உண்மையான இஸ்ரவேலரின் மகிமையை, ஒப்புக்கொடுத்துக் கைகளிலும், கால்களிலும் ஆணியடிக்கச் செய்தனர்.
அப்படிச் செய்ததைத் தடுப்பதற்குப் பதிலாக, இயேசுவும் தன்னை அவமானச் சின்னமான சிலுவையில் தூக்கப்படவும், உருக்குலையவும், அவமரியாதைக்கும் ஒப்புக்கொடுத்தார். இயேசு உயிர்த்தெழுந்ததன் மூலம் அவரே மெய்யான தாவீதின் குமாரன், தன் எதிரிகளை அன்பினால் தோற்கடித்து, அனைத்துலகிலும் உள்ள அவருடைய பிள்ளைகள் அவருடைய வார்த்தைகளை பரப்பும்படியும் செய்தார்.
நாம் எதிர்பார்ப்பதையும்விட தேவன் நல்லவர் என்பதை இயேசு காட்டுகின்றார்.