நான் ஒரு புதிய காலநிலையை அடைகிறேன். முதிர்வயதின் குளிர்காலம் இன்னும் அதற்குள் வரவில்லை. ஆனால், நான் இன்னமும் அதை அடையவில்லை. வருடங்கள் வேகமாக குதித்து ஓடிக்கொண்டிருந்தாலும், நான் அவற்றின் வேகத்தைச் சற்று குறைக்க விரும்பினேன். எனக்குள் என்னைத் தாங்குகின்ற மகிழ்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தேவன் எனக்குத் தருகின்ற ஒரு புதியநாள். நானும் சங்கீதக்காரனோடு சேர்ந்து, “கர்த்தரைத் துதிப்பதும்… காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்” (சங். 92:1,3) என்று சொல்லுகிறேன்.

என் வாழ்வில் போராட்டங்களும் வேதனைகளும் இருந்த போதிலும், மற்றவர்களின் கஷ்டங்கள் சில வேளைகளில் என்னை மேற்கொள்கின்றன. தேவன் என்னையும் சங்கீதக்காரனோடு சேர்ந்து பாட பெலப்படுத்துகிறார்” உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன் (பாடுவேன்) (வச. 4). தேவன் தந்த ஆசிர்வாதங்களுக்காக, நமது குடும்பம், நண்பர்கள், மேலும் திருப்தியளிக்கக்கூடிய வேலை ஆகியவற்றினை அவருடைய எழுச்சியூட்டும் வார்த்தைகளுக்காகவும் மகிழ்ச்சியடைவோம். தேவன் நம்மை அதிகமாக நேசித்ததினால், நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார். நமக்கு மகிழ்ச்சியைத் தந்தார். மெய்யான மகிழ்ச்சியின் மூலக்காரணராகிய பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தார் (ரோம. 15:13). தேவனாகிய கர்த்தராலே “நீதிமான் பனையைப் போல் செழித்திருப்பான்… அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் (சங். 92:12-15).

இந்த கனி என்பதென்ன? நம்முடைய வாழ்க்கைச் சூழல் அல்லது காலம் எப்படியிருந்தாலும், நம்முடைய வாழ்வினாலும் நாம் பேசும் வார்த்தையினாலும் அவருடைய அன்பிற்கு எடுத்துக்காட்டாயிருப்போம். நம் தேவனைத் தெரிந்துகொள்வதும், அவருக்காக வாழ்வதும் அவரைப் பற்றி பிறருக்குச் சொல்வதுமே உண்மையான மகிழ்ச்சி.