“நீ கேளிக்கைகளில் இருக்கும் போது நேரம் பறக்கிறது” இந்த எண்ணத்திற்கு எந்த அடிப்படை ஆதாரமுமில்லையெனிலும், அனுபவம் இதனை உண்மையெனக்காட்டுகிறது.

வாழ்க்கை இன்பமாக இருக்கும் போது, நேரம் மிக வேகமாக கடந்துவிடுகிறது. நான் விரும்பத்தக்க ஒரு பணியை செய்தாலோ, அல்லது நான் விரும்பும் ஒரு நபரோடு நான் இருந்தாலோ அதற்கு நேரம் ஒரு பொருட்டல்ல.

இந்த உண்மையைக் குறித்த என்னுடைய அனுபவம், வெளிப்படுத்தல் 4ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ள காட்சிக்கு ஒரு புதிய புரிந்து கொள்ளலைத் தருகிறது. முன்பு நான் தேவனுடைய சிங்காசனத்தின் அருகில் அமர்ந்திருக்கும் நான்கு ஜீவன்களும் ஓயாமல் சில வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது எத்தனை சலிப்படையச் செய்யும் வாழ்வு என நான் நினைத்ததுண்டு.

ஆனால், இப்பொழுது அவ்வாறு சிந்திப்பதில்லை. அவற்றின் அநேகக கண்களால் (வச. 8) அவை பார்க்கின்ற காட்சிகளை நான் நினைத்துப் பார்க்கின்றேன். தேவனுடைய சிங்காசனத்தினருகில், அவற்றின் நிலையிலிருந்து, அவை பார்க்கின்றவற்றை நான் கருத்தில் கொள்கின்றேன் (வச. 6) நான் நினைக்கின்றேன், தேவன் புவியில் தான்தோன்றித்தனமாக வாழ்கின்றவர்களிடையே எத்தனை ஞானமும்; அன்பும் கொண்டு உறவாடுகிறார் என்பதைக் கண்டு அவைகள் வியந்திருக்கின்றன எனவே இதைவிட மேலான என்ன பதிலைக் காட்ட முடியம்? என நினைக்கிறேன். “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று சொல்வதைவிட வேறென்ன சொல்வதற்கிருக்கிறது?

ஒரே வார்த்தையை மேலும் மேலும் கூற உனக்கு சலிப்பாயிருக்கிறதா? நீ நேசிக்கும் ஒருவரின் பிரசன்னத்தில் நீ இருக்கும் போது சலிப்பே ஏற்படாது. நீ எதற்காக உருவாக்கப்பட்டாயோ அதனை நிறைவேற்றும்போது நிச்சயமாக சலிப்பு இல்லை.

அந்த நான்கு ஜீவன்களைப் போன்று நாமும் தேவனை மகிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டோம். நாம் நம்முடைய கவனத்தை அவர் மீது வைத்து, அவரின் நோக்கத்தை நிறைவேற்றும் போது நம்முடைய வாழ்வு ஒருபோதும் சலிப்படையாது.

இந்தக் கட்டுரையை எழுதிய ஜூலி இப்பொழுது மோட்சத்தில் தேவனை ஆராதித்துக் கொண்டிருக்கின்றார்.