மீட்டெடுக்கப்பட்ட தோல்விகள்
அழைக்கப்பட்ட ஒரு இசைக் குழுவினர் எங்கள் ஆலயத்தில் துதி ஆராதனையை நடத்தினர். அவர்கள் கிறிஸ்துவுக்காக கொண்டிருந்த வைராக்கியம் அனைவரையும் அசைத்தது. அவர்களின் உற்சாகத்தை எங்களால் உணரவும், பார்க்கவும் முடிந்தது.
அந்த இசை கலைஞர்கள் தாங்கள் அனைவரும் முன்னாள் கைதிகள் என வெளிப்படுத்தினார்கள். உடனே அவர்களின் பாடல்கள் எங்களுக்கு ஒரு புதிய அர்த்தத்தையும், அவர்களின் துதியின் வார்த்தைகள் அவர்களுக்குள் அதிக அர்த்தமுள்ளதாக இருப்பதையும் உணர்ந்தேன். உடைந்து போன வாழ்வு மீட்டெடுக்கப்பட்டதற்கு சாட்சியாக அவர்களின் ஆராதனை இருந்தது.
இந்த உலகம் வெற்றியை அரவணைத்துக் கொள்ளும். ஆனால், கடந்துவந்த தோல்விகள் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். எத்தனை முறை நாம் தோல்வியடைந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தேவன் நம்மை நேசிக்கிறார் என்ற நிச்சயத்தை நமக்குத் தருகிறது. ஏபிரெயர் 11ல் குறிப்பிடப்பட்டுள்ள விசுவாச வீரர்களின் பட்டியலுக்கு ‘தேவனால் மீட்டெடுக்கப்பட்ட தோல்விகள்’ என தலைப்பிடலாம் என போதகர் ஃஹரி இன்ரிக் கூறுகின்றார். ‘இந்த அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் வாழ்க்கையில் குறையில்லாதவர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் ஒருவர் கூட இல்லை என அவர் குறிப்பிடுகிறார். ஆனால், தேவன் அவர்களின் தோல்விகளை மறுசீரமைப்பு வேலையில் இருக்கிறார்… இதுதான் தேவக்கிருபையின் மிகப்பெரிய அடிப்படை கொள்கை எனவும் கூறுகிறார்.
சங்கீதம் 145 தருகின்ற ஆறுதலையும் தேவனுடைய அதிசயமான கிரியைகளையும் (வச. 5,6) அவருடைய ராஜ்ஜியத்தின் மகிமைப் பிரதாபத்தையும் (வச. 11) நான் மிகவும் நேசிக்கிறேன். இது அவருடைய மனதுருக்கத்தையும் (வச. 8,9) உண்மையையும் (வச. 13) கீழே விழுந்தவர்களை துக்கிவிடுகிற அவருடையை பண்பையும் (வச. 14) கூறுகிறது. ஆம், உண்மையாகவே அவர் நம்மை மீட்டெடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.
நீங்கள் இதற்குமுன் தோல்வியடைந்ததுண்டா? ஆம், நாம் அனைவரும் தோல்வியடைந்திருக்கிறோம். நீங்கள் மீட்டெடுக்கப்பட்டு விட்டீர்களா? அவரால் மீட்டெடுக்கப்பட்ட நாம் அனைவரும் அவருடைய கிருபையின் சாட்சிகள்.
வெளிப்பக்கம் உள்ளே?
“மாற்றம்: உள்ளிருந்து வெளியேயா? அல்லது வெளியிலிருந்து உள்ளேயா?” என்பது இன்றைக்கு மேலோங்கிங்கி நிற்கும் ஒரு போக்கினைக் குறித்து சிந்திக்கும் பகுதியின் தலையங்கம், வெளிப்புற மாற்றமாகிய ஒரு அலங்காரம் அல்லது ஒரு பாவனை போன்ற எளிய வழிகள் அக மாற்றத்தை உணர வழிசெய்கிறது. இது வாழ்விலும் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம்.
இது ஒரு கவர்ச்சியுள்ள கொள்கை, நம் வாழ்வை உயர்த்தி ஒரு புதிய தோற்றத்தை காட்டிக் கொள்ள யார் தான் விரும்ப மாட்டார்கள்? ஆனால், ஒருவருக்குள் ஆழமாகப் பதிந்துவிட்ட குணாதிசயங்களை மாற்றுவது இயலாத காரியம் என்பது நம்மில் அநேகருக்குத் தெரியும்.
வெளிப்புற எளிய மாற்றங்களில் கவனம் செலுத்துவது நம் வாழ்வை உயர்த்திக் காட்டிக் கொள்ள நம்பிக்கையூட்டும் சிறந்த வழி.
ஆனால், இத்தகைய மாற்றம் நம் வாழ்வை முன்னேற்றமடையச் செய்தாலும், வேதாகமம் உள்ளான ஒரு ஆழமான மாற்றத்தைத் தேட நம்மை அழைக்கிறது. ஆனால், அது நம் சொந்த பிரயாசத்தால் முடியாது. உண்மையில் கலாத்தியர் 3ல் பவுல் இவ்வாறு கூறுகிறார். தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்துகின்ற விலையேறப்பெற்ற பொக்கிஷமாகிய நியாயப்பிரமாணம் உடைந்துபோன ஒரு தேவமனிதனை சுகப்படுத்த முடியாது (வச. 19-22). ஆவியைக் கொண்டு விசுவாசத்தினால் (5:5) கிறிஸ்துவை தரித்துக் கொண்டால் தான் உண்மையான சுகத்தையும், விடுதலையையும் பெற்றுக் கொள்ளலாம் (வச. 27). எல்லாவற்றையும் தள்ளிவிட்டு கிறிஸ்துவுக்குள் உருவாக்கப்படும் போது, எல்லாரும் உண்மையான தகுதியையும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு சுதந்திரராயும் இருக்கிறீர்கள் (3:28-29).
சுயமாக முன்னேறுவதற்கான வழிமுறைகளை அடைய நாம் அர்ப்பணிப்புடன் அதிக ஆற்றலை செலவிடுவோம். ஆனால், ஆழமான நிறைவானதாக உள்ளத்தில ஏற்படும் மாற்றம், அறிவுக்கெட்டாத அந்த அன்பை நாம் அறிந்து கொள்ளும்போது ஏற்படும் (எபே. 3:17-19). அன்பு சகலத்தையும் மாற்றும்.
எதிர்பாராத கிருபை
எனது உயர் நிலைப்பள்ளியின் இரண்டாம் ஆண்டில் ஒரு சனிக்கிழமை அதிகாலை நேரம், அருகிலுள்ள பௌலிங் கிளப்பில் எனது வேலைக்குச் செல்ல ஆவலாக இருந்தேன். முந்தின நாள் மாலையில் அங்கு வெகு நேரம் இருந்து தளமிடப்பட்ட தரையில் சகதியைத் துடைத்து துப்புரவு செய்துகொண்டிருந்தேன். ஏனெனில், அதற்கான பணியாள் உடல் நலக்குறைவால் வரவில்லை, இதனை நான் முதலாளியிடம் சொல்ல முயற்சிக்கவில்லை. அது முதலாளிக்கு வியப்பூட்டுவதாக இருக்கட்டும், இதில் என்ன தவறு நடந்துவிடப் போகிறது? என எண்ணினேன்.
ஆனால், அது அநேக விளைவுகளைத் தந்தது.
நான் வாசலில் கால் மிதித்தபோது சில அங்குலங்கள் உயரத்திற்கு தண்ணீர் நிற்பதையும் அதன் மேல் பௌலிங் கட்டைகள், காகித உருளைகள், மதிப்பெண் குறியீட்டு தாள் பெட்டிகள் மிதந்து வருவதையும் கண்டேன். அப்பொழுது தான் நான் என்ன செய்துவிட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். தரையைச் சுத்தப்படுத்திய போது பெரிய தண்ணிர் வால்வு ஒன்றினை இரவு முழுவதும் திறந்து விட்டிருந்திருக்கிறேன். நம்ப முடியவில்லை! எனது முதலாளி என்னைக் கட்டி அணைத்து புன்முறுவலோடு வரவேற்று “இது உன் முயற்சிக்காக” என்றார்.
சவுல் கிறிஸ்தவர்களைத் தண்டிப்பதிலும் துன்பப்படுத்துவதிலும் மும்மூரமாயிருந்தான் (அப். 9:1-2). ஆனால், தமஸ்குவுக்கு செல்லும் வழியில் இயேசுவை முகமுகமாய் சந்தித்தபோது (வச. 3-4), விரைவில் அப்போஸ்தலனாக மாற இருக்கும் பவுலின் பாவமான செய்கைகளை நேரடியாக இயேசு தெரிவித்தார். இந்த நிகழ்வில் பார்வை இழந்த சவுல்/பவுலுக்கு அனனியா என்ற ஒரு கிறிஸ்தவன் தேவைப்பட்டது. தைரியம் மற்றும் கிருபை நிறைந்த அனனியாவின் செயலினால் பார்வையை மீண்டும் பெற்றார் (வச. 17).
பவுலும் நானும் எதிர்பாராத கிருபையைப் பெற்றோம்.
அநேகர் குழம்பிய நிலையிலுள்ளதை நன்கு அறிவார்கள். அவர்களுக்கு நீண்ட விரிவுரைகளைக் காட்டிலும் இரட்சிப்பிற்கான நம்பிக்கை தேவை. கடின முகமும், குத்தும் வார்த்தைகளும் அவர்களுக்கு இந்த நம்பிக்கையைத் தடுத்து விடும். அனனியா அல்லது என்னுடைய முதலாளி போன்ற இயேசுவைப் பின்பற்றுபவர்களின் கிருபை நிறைந்த முகம் நாம் எதிர்பாராது சந்திக்கும் நபர்களின் வாழ்வின் மாற்றத்திற்கு வழிவகுக்கும்
முதன்மையானவைகள்
நாம் ஆகாய மார்க்கமாய் பயணிக்கும் பொழுது, விமானம் மேலெழும்பும்முன், விமான பணியாளர் பாதுகாப்பு விளக்கம் ஒன்று தருவார். அதில், விமான அறையினுள் அழுத்த குறைவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குவார். பயணிகள் தங்களுக்கு மேலுள்ள பகுதியிலிருந்து கீழே விழும் ஆக்ஸிஜன் கவசத்தை பிறருக்கு உதவுமுன் அணிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவர். ஏனெனில், பிறருக்கு உதவும்முன் உங்களை சரீரப்பிரகாரமாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
பவுல், தீமோத்தேயுவிற்கு எழுதும் போது, பிறருக்கு உதவவும், ஊழியம் செய்வதற்கும் முன்பாக, தன்னுடைய சொந்த ஆவிக்குறிய ஆரோக்கியத்தைக் காத்துகொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றார். ஒரு போதகராக தீமோத்தேயு என்னென்ன பொறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென நினைப்பூட்டுகிறார். கள்ளப் போதனைக்கு எதிர்த்து நிற்க வேண்டும் (1 தீமோ. 4:1-5). தவறான கொள்கைகைளை சீர்திருத்த வேண்டும் (வச. 6-8). கிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாய் இருப்பதற்கு தேவையானதென்னவெனில், உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு. இவைகளில் நிலைகொண்டிரு. (வச. 16). அவன் முதலாவது தனக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவை சரிபண்ணிக் கொண்டால்தான் மற்றவர்களுக்கு உபதேசிக்க முடியும்.
பவுல், தீமோத்தேயுவுக்குத் சொல்வது நமக்கும் பொருந்தும். ஒவ்வொரு நாளும் நாம் தேவனை அறியாத ஜனங்களைச் சந்திக்கின்றோம். தேவனுடைய வார்த்தை, ஜெபம் ஆகியவற்றிற்கு நேரத்தைக் கொடுப்பதிலும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் நம்மை வைத்துக் கொள்ளுவதன் மூலம் ஆவிக்குரிய ஆக்ஸிஜனை நிரப்பிக் கொள்ளலாம். இவ்வாறு நமக்கும் தேவனுக்குமுள்ள உறவை சரிபடுத்திக் கொண்டு ஆவியில் விழிப்பாய் இருந்து கொண்டால்தான் மற்றவர்களுக்கு உதவ முடியும்.
எது நடந்தாலும் தேவனை நம்புவேன்
1992ல் ஏற்பட்ட ஒரு காயத்தினால் எனது மேல் முதுகு தோல்பட்டைகள் மற்றும் கழுத்து பகுதிகளில் அதிக வலியினால் அவதியுற்றேன். அத்தகைய வேதனையில் நம்பிக்கையிழந்த வேளைகளில் தேவனை நம்பிக்கையோடு துதித்தல் என்பது எப்பொழுதும் சுலபமானதல்ல. ஆனால், தேவனுடைய மாறாத பிரசன்னம் என்னைத் தேற்றியது. அவர் என்னை பெலப்படுத்தி அவருடைய மாறாத நன்மையினாலும், அளவற்ற வல்லமையினாலும் தாங்கி நடத்தும் கிருபையினாலும் ஆறுதல்படுத்தினார். சிலவேளை நான் கடவுளை சந்தேகிக்கும் போது, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் திட நம்பிக்கையினால் தைரியப்படுத்தப்பட்டேன். அவர்கள் நம்புவதற்கு ஏதுவில்லாத சூழ்நிலையிலும் தேவனைப் பணிந்து கொண்டு தேவன் அவர்களோடிருக்கிறார் என்று நம்பினார்கள்.
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச் சூளையின் நடுவில் போடப்படுவீர்கள் என எச்சரித்திருந்தும் அவர்கள் உண்மை தேவனைவிட்டு விட்டு பொற்சிலையை வணங்கவில்லை (தானி. 3:13-15). இந்த மூன்று மனிதரும் தைரியத்தையும் திட நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்கள் (வச. 17). அந்த ஆபத்தான வேளையிலும் தேவன் தங்களை விடுவியாமல் போனாலும்; அவர் ஆராதிக்க உகந்தவரல்ல என்று ஒருபோதும் சந்தேகப்படவில்லை (வச. 18). திட நம்பிக்கையிலிருந்த அவர்களின் தேவையின் போது, தேவன் அவர்களை தனியே விடவில்லை. தேவன் அக்கினிச்சூளையின் நடுவே அவர்களோடிருந்து அவர்களைப் பாதுகாத்தார் (வச. 24-25).
தேவன் நம்மையும் தனியே விடுவதில்லை. நேபுகாத்நேச்சாரின் அக்கினிச்சூளைபோன்ற சோதனைகளின் மத்தியிலும் நம்மோடிருக்கிறார். நித்தியத்தின் மறுபக்கத்தில் (இவ்வுலகில்) ஒரு வேளை நம் வேதனைகள் முடிவில்லாதவைகளாயிருப்பினும், வல்லவரும், நம்பிக்கைக்குரியவரும், நல்லவருமாக தேவன் இருக்கிறார். நாம் அவரின் மாறாத அன்பின் பிரசன்னத்தைச் சார்ந்து கொள்ளுவோமாக.