என் தாயார் இறந்து இரண்டு மாதங்களாகியிருந்தது. கிறிஸ்துமஸூக்கு இன்னும் ஒரு வாரமேயிருந்த நிலையில், வீட்டை அலங்கரிப்பது, கடைக்குச் செல்வது, எனது முன்னுரிமை பட்டியலில் கடைசியாயிருந்தது. எங்கள் குடும்பத்தின் விசுவாசத்தாயின் மரணத்தை இன்றும் நினைத்துக் துக்கத்தில் இருந்தபடியால் என்னை ஆறுதல்படுத்த என் கணவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. நான் ஒதுங்கியே இருந்தேன். என் மகன் சேவியர் சீரியல் பல்புகளை வீட்டினுள் தொங்கவிட்டு பிளக்கை சொருகி எரியச் செய்து விட்டு அவனும், அவன் தந்தையும் வேலைக்குப் போய்விட்டார்கள்
அந்த கலர் பல்புகள் விட்டுவிட்டு எரியும்போது, தேவன் என்னை என் இருளிலிருந்து வெளியே கொண்டுவந்தார். தேவனுடைய வெளிச்சம் எனக்குள் வந்தபோது, எவ்வளவு வேதனையான சூழ்நிலையிலிருந்தாலும், அவருடைய மாறாத சத்தியத்தின் வெளிச்சம் அவருடைய மாறாத தன்மையை அப்பொழுதும் அது வெளிப்படுத்திக் காட்டியது.
இக்கட்டான காலையில் தேவன் எனக்கு நினைப்புட்டினதை, 146ம் சங்கீதம் உறுதிப்படுத்தியது. எனக்கு உதவி செய்பவரும், என் வல்லமையும் இரக்கமுள்ள “தேவன் மேலேயே, என் நம்பிக்கை நித்தியகாலமாய் இருக்கும்” (வச. 5). எல்லாவற்றையும் சிருஷ்டித்த அவரே “என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்” (வச. 6). “அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்கிறார்”, நம்மைப் போஷித்துப் பாதுகாக்கிறார் (வச. 7). “மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்” (வச. 8), “கர்த்தர் காப்பாற்றுகிறார்”, “ஆதரிக்கிறார்” “சதா காலங்களிலும் அரசாளுகிறார்; தலைமுறை தலைமுறையாகவும் ராஜரீகம் பண்ணுகிறார் (வச. 9,10).
கிறிஸ்துமஸ் வரும்பொழுது, சிலவேளைகளில், சந்தோஷம் பொங்கி வழியும், சில வேளைகளில் இழப்பைச் சந்திக்கிறோம், வேதனைப்படுகிறோம் அல்லது தனிமை உணர்வினால் வருந்துகிறோம். ஆனால், எல்லா நேரங்களிலும் அவர் நமது இருளில் வெளிச்சமாயிருந்து, தேவையான உதவிகளைச்செய்து நித்திய நம்பிக்கையாயிருப்பேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறார்.
தேவன் தமது மாறாத தன்மையினால் நமது நம்பிக்கையை பலப்படுத்துகிறார்.