என்னுடைய சகோதரி மேசெல் சிறியவளாக இருந்தபோது யாவருமறிந்த ஒரு பாடல் “இயேசு என்னை நேசிக்கிறார் இது எனக்குத் தெரியும், ஏனெனில் வேதாகமம் மேசெல்லை நேசிக்கிறார் என்று சொல்லுகிறது” என்று தன் சொந்த வழியில் பாடும் போது அது எனக்கு அளவு கடந்த எரிச்சலைத் தந்தது! அவளுடைய புத்திசாலியான மூத்த சகோதரி இப்பாடலை ‘வேதாகமம் என்னையும் அவ்வாறுதான் நேசிக்கிறார்” என்று பாடுவாள். ஆனால், இவள் தன் சொந்த வழியில் பாடுவதில் உறுதியாக இருந்தாள்.
ஆனால், இப்பொழுது என் சகோதரி சரியாகத்தான் பாடியிருக்கிறாள் எனத் தோன்றுகிறது. இயேசு நம்மை நேசிக்கிறார் என்று வேதாகமம் சொல்லும் பொழுது, மே-செல்லுக்கு மட்டுமின்றி நம் அனைவரையும் நேசிக்கிறார் என்று சொல்லுகிறது. மீண்டும் மீண்டும் நாம் இந்த உண்மையை வேதத்தில் வாசிக்கிறோம். உதாரணமாக, அப்போஸ்தலனாகிய யோவான் ‘இயேசு மிகவும் நேசித்த சீஷன்’ (யோவா. 21:7,20). தேவன் நம்மீது வைத்துள்ள அன்பை மிகச் சிறந்த முறையில் வேத வசனம் யோவான் 3:16ல் “தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” எனக் கூறியுள்ளார்.
தேவனுடைய அன்பைக் குறித்து மீண்டும் யோவான் வலியுறுத்தி 1 யோவான் 4:10ல் நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது என்று கூறுகிறார். இயேசு தன்னை நேசிக்கிறாறென்று யோவான் கூறியது போல இயேசு நம்மையும் நேசிக்கிறார் என உறுதியாகக் கூறமுடியும். வேதாகமம் நம்மிடம் அதையே கூறுகிறது.
இயேசு என்னை நேசிக்கிறார்! இதை நான் அறிவேன்.