சமீபத்தில் என் கணவர் தனது முக்கியமானதொரு பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்தப் பிறந்தநாளின் எண் பூஜ்யத்தில் முடிந்தது. அதுவே புதியதொரு பத்தாண்டுகளைக் கடக்கப்போகிறார் என்றும், அதற்கு நான் கொடுக்கும் பரிசு அவரைக் கனம் பண்ணுவதாக இருக்க வேண்டும் என்றும் தீவிரமாக சிந்தித்தேன். இதை ஏற்ற விதத்தில் கொண்டாடுவது எப்படி என்று பலவிதமான சிந்தனைகளைக் பற்றி என் பிள்ளைகளிடம் ஆலோசித்தேன். புதிதாக துவங்க இருக்கும் புத்தாண்டு காலத்திற்கான முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அந்த கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். கொடுக்கும் பரிசு, அவர் எங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு இன்றியமையாமவர் என்பதைப் பிரதிபலிக்க வேண்டுமென்று விரும்பினேன். எங்கள் பரிசு அவருடைய வாழ்க்கையில் இந்த முக்கிய பிறந்த நாளுக்கு ஏற்றதாக இருக்கவேண்டுமென்று விரும்பினேன்.
முக்கியமான பிறந்தநாளை விட மிகப்பெரிய பரிசொன்றை தேவனுக்குக் கொடுக்க சாலமோன் ராஜா விரும்பினார். தான் கட்டும் ஆலயம் தேவனுடைய பிரசன்னத்திற்கு உகந்ததாக இருக்க விரும்பினார். தேவாலய கட்டுமானப் பொருட்களுக்காகத் தீரு ராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் “எங்கள் தேவன் மற்ற எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்” ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரிதாயிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் (2 நாளா. 2:5). மனிதரின் கைகளினால் கட்டப்படும் ஆலயம், வானங்களும் கொள்ளாத தேவனின் நற்பண்புகளுக்கு ஒருநாளும் ஈடாகாது என்று அறிந்தும், அவர் மேலுள்ள அன்பினாலும், அவரை ஆராதிக்க அவர்மேல் கொண்ட விருப்பத்தினாலும் கட்டினான்.
நம்முடைய தேவன் மெய்யாகவே, எல்லாத் தேவர்களையும்விட பெரியவர். அவர் நம் வாழ்க்கையில் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறபடியால், நம் இருதயங்கள் அன்பினால், தூண்டப்பட்டு, அதன் மதிப்பை பொருட்படுத்த விலையுயர்ந்த காணிக்கைகளை செலுத்துகிறோம். சாலமோனுக்குத் தன் காணிக்கை தேவனுடைய தகுதிக்கு ஈடாகாது என்று அறிந்தும், சந்தோஷமாகத் தன் காணிக்கைகளைச் செலுத்தினான். நாமும் அப்படியே செய்யலாம்.
நாம் தேவனுக்குக் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பொக்கிஷமாக கருதப்படும் பரிசு நமது அன்பே.