அந்த அறை இருட்டாக்கப்பட்டது. நாங்கள் அப்பொல்லோ 13 திரைப்படத்தைப் பார்க்க ஆயத்தமானோம். என் சிநேகிதன் மெதுவாக என் காதுக்குள் “ஐயோ பாவம், எல்லாரும் மரித்துப்போனார்கள்” என்றான். 1970ல் நடந்த விண்வெளி பயணத்தைப் பற்றிய படத்தைக் கலக்கத்துடன், எப்பொழுது மரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன். படம் முடியும் தருவாயில்தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். நான் அந்த விண்வெளி பயணத்தின் உண்மையான முடிவை அறியாததினால் ஏமாற்றப்பட்டேன். அந்த மூன்று விண்வெளி வீரர்களும் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் உயிரோடு வீட்டிற்குத் திரும்பினர்.
நம் வாழ்க்கையின் முடிவை – நாம் உயிரோடு பரமவீட்டிற்குப் போவதை, கிறிஸ்துவுக்குள் அறிந்திருக்கிறோம். அதாவது வெளிப்படுத்தல் புத்தகம் சொல்வது போல, நாம் நம்முடைய பரம பிதாவோடு என்றென்றும் வாழுவோம். சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்ற தேவன் “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” சிருஷ்டிப்பார் (வெளி. 21:1,5). தேவன் தமது பிள்ளைகளை பயமும், இராக்காலமில்லா புதிய நகரிற்கு அழைத்து செல்வார். நமக்கு இந்தக் கதையின் முடிவு தெரிந்தபடியால் நமக்கு நம்பிக்கையுண்டு.
இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது? நமக்கு அன்பானவர்கள் மரிக்கும், அல்லது நாமே மரிக்கும் துன்பமான நேரங்களில் பரலோக நம்பிக்கை நம் துன்பத்தை மாற்றிவிடும். மரிக்கும் எண்ணம் நம்மை பின்னுக்கு தள்ளினாலும், நித்திய ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தத்தை நாம் பெற்று அனுபவிக்கலாம். தேவனுடைய வெளிச்சத்தில் என்றென்றைக்கும் வாழப்போகும் சாபமில்லாத நகரத்தை வாஞ்சிக்கிறோம் (22:5).
தேவன் தம்முடைய ஜனங்களுக்கு ஒரு நல்ல முடிவையே வாக்குப்பண்ணியிருக்கிறார்.