ஜேன் யோலன் எழுதிய “யாரென்றறியப்படாமலிருக்க முயற்சித்தல்” என்ற கட்டுரையில் தங்கள் உள்ளான மனதில் தாங்கள் யார் என்று அறியப்படாமல் தங்களை மறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தான் சிறந்த எழுத்தாளர்கள் என்று எழுதியிருந்தார். சொல்லப்படுகிற கதை தான் முக்கியம்; கதை சொல்பவரல்ல.
நாம் சொல்லுகிற கதை நமக்காக தன் ஜீவனையே கொடுத்த இரட்சகர் இயேசுவைப் பற்றியதே. மற்ற விசுவாசிகளோடு இணைந்து நாமும் அவருக்காக வாழ்ந்து அவருடைய அன்பை பிறருடன் பகிர்ந்து கொள்கிறோம்.
ரோமர் 12:3-21 இயேசுவைப் பின் பற்றுகிறவர்களுக்கிடையே உள்ள உறவில் ஊடுருவியிருக்க வேண்டிய தாழ்மையையும், அன்பையும் குறித்துப் போதிக்கிறது. உங்களைப் பற்றியும் உங்கள் முக்கியத்துவத்தைப் பற்றியும் மிதமிஞ்சி எண்ணிக்கொள்ள வேண்டாம். மாறாக, தேவன் நம்மெல்லாருக்கும் தந்திருக்கிற விசுவாசத்தின் வெளிச்சத்திலே நம்முடைய திறமைகளை சரியாக நிதானித்தறிய முயற்சிப்போமாக. “சகோதர சிநேகத்திலே ஒருவர்மெலோருவர் அன்பாயிருப்போமாக. கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக் கொள்வோமாக” (வச. 3,10).
நம்முடைய கடந்தகால சாதனைகளைக் குறித்த பெருமை பிறருடைய தாலந்துகளைக் காணாதபடி குருடாக்கிப் போடும். கர்வம் எதிர்காலத்தை பாழாக்கிவிடும்.
இயேசுவுக்குப் பாதையை செவ்வைப்படுத்தும் ஊழியத்தைப் பெற்ற யோவான் ஸ்நானகன், “அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” என்றான். அது நம்மெல்லாருக்கும் தேவையான ஒரு சிறந்த குறிக்கோள் அதுவே.
எப்பொழுதும் தேவனுக்கு முன்பாகத் தாழ்மைப்பட்டிருங்கள். அவரே உங்கள் எல்லாவற்றிலும் எல்லாமுமாயிருப்பாராக. ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்