நானும், என் மகளும், எங்களுக்கு அருகில் வசிக்கும் எங்களது உறவினர்கள் அனைரும் சேர்ந்து ஒரு குடும்பக் கூடுகைக்குச் செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தோம். எனது மகள் அந்த கூடுகையைக் குறித்து சற்று பயந்ததால், “நான் எனது காரை ஓட்டிச்செல்லுகிறேன்”, அதில் போகலாம் என்று கூறினேன். “சரி ஆனால், என்னுடைய காரில் செல்லுவது வசதியாக இருக்கும். அதை உங்களால் ஓட்டிவர இயலுமா?” என்று கேட்டாள். எனது சிறிய காரைவிட அவளது பெரிய காரை பயன்படுத்த அவள் விரும்புகிறாள் என்று நான் எண்ணிக் கொண்டு, “என்னுடைய கார் மிகவும் நெருக்கமாக உள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு அவள் “அப்படி இல்லை, எனது கார்தான் எனக்கு பாதுகாப்பாக இருக்கும் அதில் இருக்கும் பொழுது நான் பாதுகாப்புடன் இருப்பதாக உணருகிறேன்” என்றாள்.
அவள் கூறியது என்னுடைய தனிப்பட்ட “பாதுகாவலான இடத்தைக்” குறித்து சிந்திக்கத் தூண்டியது. “கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான்” என்ற நீதிமொழிகள் 18:10 வசனத்தை நினைவு கூர்ந்தேன். பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு நகரத்தின் சுற்றுச்சுவர்களும் காவற் கோபுரங்களும் வெளியே இருந்து வரக்கூடிய ஆபத்துக்களைக் குறித்து எச்சரிப்பதாகவும், உள்ளிருக்கும் மக்களை பாதுகாப்பதாகவும் இருந்தன. தேவனுடைய நாமம் அவருடைய குணாதிசயங்களையும், அவருடைய பரிபூரண தன்மைகளையும் குறிப்பதோடு, அவருடைய ஜனங்களுக்கு உண்மையான பாதுகாப்பை அளிப்பதாக நீதிமொழிகள் எமுதியவர் தன் கருத்தை நீதி 18:10ல் தெரிவித்திறுக்கிறார்.
ஆபத்தான நேரம் என்று எண்ணி பாதுகாவலுக்காக வாஞ்சிக்கும் பொழுது சில இடங்கள் நமக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. உதாரணமாக புயல் வீசும் பொழுது ஒரு பலமான கூரை நமது தலைக்கு மேல் இருப்பது, தேவையான பொழுது, மருத்துவ உதவி செய்யும் மருத்துவமனை இருப்பது, அன்புள்ளவர்களின் அன்புடன் கூடிய அரவணைப்பு ஆகியவைகளாகும்.
உங்ளது பாதுகாப்பான இடம் எது? எங்கு பாதுகாப்பைத் தேடினாலும், பெலனையும், பாதுகாவலையும் அளிக்கும் தேவபிரசன்னமே நமக்கு உண்மையான பாதுகாப்பான இடமாகும்.
வாழ்க்கையில் புயல் மோதி அடிக்கும் பொழுது தேவனே நமக்கு பாதுகாவலான இடம்.