பல நூற்றாண்டுகளாக யுத்தத்தையும் அழிவையும் சந்தித்த பழைய எருசலேம் நகரம், இன்று அதன் இடிபாடுகளுக்கு மேலாகவே தற்கால எருசலேம் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் ஒருமுறை எருசலேமிற்கு சென்றிருந்த பொழுது Via Dolora sa என்ற சிலுவைப் பாதையில் நடந்து சொன்றோம். அது இயேசு அவரது சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரிக்குத் சென்ற பாதையாகும். அன்று வெப்பம் மிக அதிகமாக இருந்தால், சற்று ஒய்வெடுக்க சீயோன் சகோதரிகளால் நடத்தப்பட்ட கத்தோலிக்க பெண் துறவிகல் மடத்தின் குளிர்ச்சியான அடித்தளத்திற்கு சென்றோம். அங்கு சமீப காலத்தில் கட்டடம் கட்ட தோண்டின பொழுது கிடைத்த நடை பாதைக் கற்களைப் பார்த்து வியப்பில் ஆழந்தேன். அந்தக் கற்களில் ரோமச் போர்ச்சேவகர்கள் ஓய்வாக இருந்த பொழுது விளையாடின விளையாட்டுக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
அந்தக் குறிப்பிட்ட கற்கள் இயேசுவின் காலத்திற்கு பிந்தின காலத்தைச் சேர்ந்தவைகளாக இருந்த பொழுதும், அவை அக்காலத்தில் இருந்த ஆவிக்கேற்ற வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது. வேலையில் களைப்படைந்த பொழுது, அவர்கள் நேரத்தை சோம்பலாகக் கழித்தது போல, தேவனைக் குறித்துப் பிறரைக் குறித்தும் கவலைப்படாமல் இருக்கின்றேனோ என்று எனது ஆவிக்கேற்ற வாழ்க்கையைக் குறித்து ஆழமாக சிந்திக்கத் தூண்டியது. நான் நின்று கொண்டிருந்த இடத்தில், கர்த்தராகிய இயேசு எனது பாவங்கள் மீறுதல்கள் அனைத்தையும் அவர்மேல் போட்டு எனக்காக வாரினால் அடிக்கப்பட்டார், ….., எச்சில் துப்பப்பட்டார் என்பதை அறிந்து என் மனம் ஆழமாகத் தொடப்பட்டது.
“நம்முடைய மீறுதலிகளினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” ஏசா. 53:5.
அந்த நடைபாதை கற்களோடு எனக்கு ஏற்பட்ட சந்திப்பு எனது பாவங்களைவிட மேலாக இயேசுவின் அன்பைப்பற்றி இன்னமும் என்னுடன் பேசுகின்றன.
நமது பாவங்கள் அதிகம், தேவனுடைய கிருபை அதைவிட அதிகம்.