நானும் என் கணவரும் மருத்துவமனையில் மிகுந்த மனக் கவலையுடன் அமர்ந்திருந்தோம். எனது சிறிய மகனின் கண்களில் ஏற்பட்ட குறையை சரிசெய்யும் அறுவை சிகிச்சை நடை பெற்றுக்கொண்டிருந்தது எனது மனக்கவலையினாலும், வருத்தத்தினாலும் என்வயிறு குழம்பினது. தேவன், அவரது சமாதானத்தை எனக்கு தரும்படி ஜெபிக்க முயன்றேன். எனது வேதாகமத்தை புரட்டினபொழுது ஏசாயா 40ம் அதிகாரத்தைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தேன். நான் நன்றாக அறிந்திருந்த அந்த பகுதியில் புதிய சத்தியங்கள் எனக்கு கிடைக்குமாவென்று எண்ணி அப்பகுதிக்கு வேதாகமத்தை திருப்பினேன்.
நான் அப்பகுதியை வாசித்தபொழுது பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அப்பகுதி, தேவன், “மேய்ப்பனைப் போல தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக் குட்டிகளை தமது புயத்தினால் சேர்த்து, தமதுமடியிலே சுமந்து கரவலாடுகளை மெதுவாய் நடத்துவார்” (வச. 40:11) என்று எனக்கு ஞாபகம் மூட்டியது. அந்த நிமிடத்தில் தானே என் கவலை என்னை விட்டு நீங்கியது. ஏனெனில் தேவன் நம்மை அரவணைத்துள்ளார், வழி நடத்துகிறார். நம்மைக் குறித்து கரிசனை கொள்ளுகிறார் என்று உணர்ந்தேன். தேவன் அமைதியாக என்னில் செயல்பட்டார். அந்த நேரத்தில் அதுதான் எனக்கு மிகவும் தேவையாக இருந்தது. எனது மகனின் அறுவை சிகிச்சையின்பொழுதும், அறுவை சிகிச்சை முடிந்த பின்பும் தேவ சமாதானத்தால் நிரப்பப்பட்டேன். (தேவனுடைய கிருபையால் எனது மகனின் அறுவை சிகிச்சை நல்லமுறையில் நடந்தது.
தேவன் அவரது தீர்க்கத் தரிசியாகிய ஏசாயாவின் மூலம் தானே, அவர்களது மேய்பனாக இருந்து அவர்களது அன்றாட வாழ்க்கையில் அவர்களை செம்மையாக நடத்தி, அவர்களுக்கு ஆறுதல் அளிப்பவராக இருக்கிறாரென்று அவர்களது ஜனங்களுக்கு வாக்குப் பண்ணியுள்ளார். நாமும் கூட நம்மைப் பாரப்படுத்தும், கவலை தரும் எண்ணங்களை அவரிடம் கூறி அவருடைய அன்பையும், சமாதானத்தையும் தேடும் பொழுது, அவர் நம்மை அன்புடன் மெதுவாக அரவணைத்து நடத்துவதை அறிந்துக்கொள்வோம். அவரே நமது நல்ல மேய்ப்பராக இருந்து நம்மை அவரது மார் போடு அணைத்து, அவரது நித்திய கரங்களில் நம்மை தாங்கி வருகிறார் என்பதை அறிந்திருக்கிறோம்.
நல்ல மேய்ப்பர் அவரது ஆடுகளை அன்போடு கவனித்துக் கொள்ளுகிறார்.