மாற்கின் தகப்பனார் அவரது குடும்பத்தை> குடும்ப கூடுகைக்கு அழைத்திருந்த பொழுது, மாற்கு அவனது குழந்தை பருவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தான். அவனது குடும்பத்தின் கார் பழுதடைந்துவிட்டது. மாத இறுதியானவுடன் அவனது குடும்பத்தின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகிவிடும். மாற்கின் தந்தை மனம் பதறாமல் ஜெபம் பண்ணினார். பின்பு அவரது குடும்ப அங்கத்தினரிடம் தேனிடமிருந்து பதிலை எதிர்பார்க்கும்படி கூறினார். தேவனுடைய உதவி ஆச்சரியப்படத்தக்க பல்வேறு வழிகளில் வந்ததை மாற்கு இன்று நினைவு கூறுகிறான். அவர்களது நண்பர் ஒருவர் அவர்களது காரை பழுதுபார்த்து கொடுத்தார். எதிர்பாராத நபரிடமிருந்து காசோலைகள் வந்தன. அநேகர் அவர்களுக்கு தேவையான உணவை வீட்டிலே வந்து கொடுத்தார்கள். நன்றியுள்ள இருதயங்களோடு குடும்பத்தினர் தேவனை துதிப்பது இலகுவாக இருந்தது. ஆனால், அவர்களது குடும்பத்தின் நன்றியுணர்வு ஒரு நெருக்கமான சுழ்நிலையினால் உண்டானது.
சங்கீதம் 57 ஆராதனைப் பாடல்களுக்கான உணர்ச்சி பூர்வமான தூண்டுதலை உண்டாக்குகிறது. “தேவனே வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்” (வச. 11) என்று தாவீது அறிவித்த பொழுது மத்திய கிழக்கு நாட்டில் மகிமை பொருந்திய இரவு நேர ஆகாயத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்திருப்பான். அல்லது ஒருவேளை ஒரு கூடாரத்தில் நடந்த ஒரு ஆராதனையில் அவன் பாடிக்கொண்டிருப்பான் என்று நாம் கற்பனை பண்ணலாம். ஆனால், உண்மையில் தாவீது அவனது உயிருக்குப் பயந்து ஒரு குகையில் ஒளிந்து கொண்டிருந்தபொழுது அந்தபாடலைப் பாடியுள்ளான்.
இந்த சங்கீதத்தில் தாவீது “சிங்கங்களின் நடுவாக இருக்கிறேன்” என்று கூறுகிறான். “தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும் அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.” சங்கீதம் 57:4 என்றும் தாவீது கூறியுள்ளார். தாவீதின் நெருக்கங்களில் இந்த துதி சங்கீதம் உருவானது. அவனை கொல்லுவதற்கு அவனைத் தொடர்ந்த அவனது எதிராளிகள் நெருக்கினாலும் கவலைப்படாமல் “என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது. தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்” (வச. 7) என்ற இந்த ஆச்சரியமான வார்த்தைகளை தாவீதினால் எழுத முடிந்தது.
இன்று நாம் எப்படிப்பட்ட நெருக்கங்களை சந்தித்தாலும், நமக்கு உதவி செய்ய ஆயத்தமாகவுள்ள தேவனண்டைஓடிவிடலாம். அப்பொழுது அவரது மாறாத நித்திய கரிசனை நம்மேல் உள்ளது என்ற நம்பிக்யோடு தேவனை துதித்து போற்றலாம்.
உங்களது அடுத்த நெருக்கடியான நேரம், கைவிடாத நமது தேவனை நம்புவதற்கானஅடுத்த சந்தர்ப்பமாக உள்ளது.