பாடகரும், பாடலாசிரியருமான ராபர்ட் ஹேம்லெற் “எனக்காக ஜெபிக்கும் பெண்மணி” என்ற பாடலை தன் தாயாருக்கு அஞ்சலியாக எழுதினார். அவருடைய தாயார் ஒவ்வொரு நாள் காலையும் தன் மகன்களுக்காக, அவர்கள் பேருந்து நிற்குமிடத்திற்கு செல்லுமுன் ஜெபிப்பது வழக்கம். ஹேம்லெற்றின் இப்பாடலை பாடக் கேட்டதிலிருந்து ஒரு இளம் தாயார் தன் சிறு மகனோடு ஜெபிக்க ஆரம்பித்தாள். அதன் பலன் இதயத்திற்கு இதமாக இருந்தது. ஒரு நாள், அவளுடைய மகன் வெளியே புறப்பட்டு போகுமுன் அவன் தாயார் அவனுக்காக ஜெபித்தார். 5 நிமிடம் கழித்து அவன் பேருந்து நிற்குமிடத்திலிருந்து மேலும் சில சிறுவர்களோடு திரும்பி வந்தான். “இவர்களுடைய தாய்மார் இவர்களோடு ஜெபிக்கவில்லை” என்று சொன்னான்.
எபேசியர் புத்தகத்தில் பவுல் நம்மை ஜெபிக்கும்படி கட்டாயப்படுத்துகிறார். “எல்லா சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடு” (6:18) என குறிப்பிடுகிறார். நம் குடும்பங்களில், அனுதின வாழ்வு தேவனையே சார்ந்திருக்கிறது என்பதை செயலில் காட்டும் போது நம் குழந்தைகள் அவர்களோடிருக்கும் மக்களின் உண்மையான விசுவாசத்தைக் கண்டு, தேவன் மீது தங்கள் நம்பிக்கையை வைக்கக் கற்று கொள்கிறார்கள் (2 தீமோ. 1:5). குழந்தைகளுக்காக, குழந்தைகளோடு ஜெபிப்பதன் மூலமே ஜெப வாழ்வின் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க முடியும். இதுவே அவர்கள் தேவன் மீதுள்ள நம்பிக்கையோடு இருப்பதன் அவசியத்தைத் தெரிந்து கொள்ள வழிவகுக்கும்.
நம் குழந்தைகளுக்கு தேவன் மீதுள்ள உண்மையான நம்பிக்கையை வளர்த்து விடுவோமாகில் தேவன் நம் வாழ்வில் எப்போதும் நம்மோடிருந்து, நம் வாழ்வின் ஒரு பகுதியாகவே அமைந்து தொடர்ந்து நம்மீது அன்பு கூர்ந்து, நம்மை வழிநடத்தி பாதுகாக்கிறார் என்ற உறுதியைக் கொடுக்கிறோம். இதுவே நாம் அவர்களுக்குக் கொடுக்கும் சிறந்த வெகுமதியாகும் (நீதி. 22:6, 2 தீமோ. 1:5).
அனுதின ஜெபம், அனுதினக் கவலைகளைக் குறைக்கிறது.