நான் மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றில் ஒரு செல்போன் வாங்க முற்பட்டபோது, பெயர், சொந்தநாடு, முகவரி என சில கேள்விகள் கேட்கப்பட்டது. என்னுடைய கிளார்க் என் வடிவத்தை நிரப்பிய போது அவர் என்னிடம் உன் தந்தையின் பெயர் என்ன? என்று கேட்டார். இக்கேள்வி என்னை வியப்புக்குள்ளாக்கியது. இது அவ்வளவு முக்கியமானதா என நினைத்தேன். எங்கள் கலாச்சாரத்தில் தந்தையின் பெயரைத் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. ஆனால், இங்கு என்னுடைய அடையாளத்தைத் தெரிந்து கொள்ள தேவையாயிருக்கிறது. சில கலாச்சாரங்களில் முன்னோர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இஸ்ரவேலர் முன்னோர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்கள் தங்கள் முற்பிதா ஆபிரகாமைக் குறித்து பெருமை கொள்கின்றனர். அவர்கள் ஆபிரகாமின் வம்சா வழியினர் தான் தேவனுடைய பிள்ளைகள் என்பதில் பெருமிதம் கொள்கின்றனர். மத வம்சாவழிக்கும் ஆன்மீக குடும்பத்திற்கும் தொடர்புண்டு என்பது அவர்களுடைய எண்ணம்.
பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் யூதர்கள் மத்தியில் இயேசு தோன்றிய போது, தேவன் இக்கருத்தினை மறுக்கிறார். அவர்கள் ஆபிரகாம் எங்கள் முற்பிதா எனக் கூறியும், பிதாவினால் அனுப்பப்பட்ட இயேசுவை நேசிக்காவிட்டால் அவர்கள் தேவனுடைய குடும்பத்தினர் ஆகமாட்டார்கள் எனக் குறிப்பிடுகிறார்.
இக்கருத்து இன்றைக்கும் பொருந்தும். நாம் எந்தக் குடும்பத்தில் பிறக்கிறோமென்பது நமது விருப்பத்தின்படியல்ல. ஆனால், எந்த ஆன்மீக குடும்பத்திற்குச் சொந்தமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். நாம் இயேசுவின் பேரில் நம்பிக்கையாயிருந்தால் தேவன் நமக்கு அவருடைய பிள்ளைகள் என்ற உரிமையைத் தருகிறார் (யோவா. 1:12).
உன்னுடைய ஆன்மீகத் தந்தை யார்? நீ இயேசுவைப் பின்பற்ற தீர்மானித்து விட்டாயா? இன்றே உன் நம்பிக்கைய இயேசுவின் மீது வை. அவர் தரும் பாவ மன்னிப்பை பெற்று அவர் குடும்பத்தின் அங்கத்தினராகிவிடு.
தேவனே நமது நித்திய தந்தை.