டெக்ஸாஸிலுள்ள காவல்துறை மற்றும் தீயனைப்புத் துறையின் மதப் போதகர் ஜாண் ஃபப்ளர். சட்டம் ஒழுங்கை அமல்படுத்தும் அலுவலர்கள் எதிர் நோக்குகின்ற சுழல்களை நன்கு புரிந்து கொள்வதற்காக ப்பளர் தன் பணியின் போது 22 வார ஓய்வு விடுப்பில் காவல் துறையினரின் பயிற்சியில் கலந்து கொண்டார். பிற பயிற்யாளர்களோடும் தன் நேரத்தை செலவிட்டதன் மூலம் அத்துறையின் புதிய சவால்களைத் தெரிந்து கொண்டார். அவர் ஒரு புதிய பணிவையும் கரிசனையும் பெற்றுக் கொண்டார். எதிர்காலத்தில், உணர்வு சார்ந்த மன அழுத்தம், வெறுப்பு, இழப்பு ஆகியவற்றோடு போராடுகின்ற காவல் துறை அதிகாரிகளுக்கு இன்னும் பயனுள்ள ஆலோசனைகளைத் தரமுடிந்தது.
தேவன் நாம் எதிர்நோக்குகின்ற சுழல்களை நன்கு புரிந்து கொள்கிறார். ஏனெனில் அவர் நம்மை உருவாக்கியவர். நமக்கு ஏற்படுகின்ற யாவையும் அவர் நன்கு அறிவார். அவர் நம்மை நன்கு புரிந்து கொள்கிறார். ஏனெனில் அவர் தாமே பூமிக்கு வந்து மனித வாழ்வையும் அனுபவித்தவர். “அவர் மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்” (யோவா. 1:14). இயேசுகிறிஸ்து என்ற மனிதனாக வாசம் பண்ணினார்.
இயேசு கிறிஸ்துவின் புவிவாழ்வு அதிக துன்பம் நிறைந்ததாக இருந்தது. அவர் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தையும், வெறும் வயிற்றின் வேதனையையும், வீடற்றோரின் நிலையையும் அனுபவித்தார். உணர்வு சார்ந்து பார்க்கும் போது, தன்னை ஏற்றுக் கொள்ளாமை, காட்டிக் கொடுக்கப்படுதலின் வேதனை, மேலும் கலவரங்கள் ஆகியவற்றையும் சகித்தார்.
இயேசு நண்பர்களின் மகிழ்ச்சியிலும் குடும்ப உறவிலும் பங்கு கொண்டார். இப்புவியில் நாம் எதிர் நோக்குகின்ற மிக மோசமான பிரச்சனைகளையும் சந்தித்தார். அவர் நம்பிக்கையைத் தருபவர். அவர் ஆலோசனைக் கர்த்தா (ஏசா. 9:6). நம் பிரச்சனைகளை பொறுமையோடும், கரிசனையோடும் கேட்டு ஆழ்ந்த கருத்தோடும் கவலையோடும் ஆலோசனைத் தருபவர் அவர் ஒருவரே. “நான் அதன் வழியே வந்திருக்கிறேன் நான் உன்னை புரிந்து கொள்கிறேன்” என்று சொல்ல முடியும்.
தேவன் நாம் எதிர்நோக்கும் போராட்டங்களைப் புரிந்துகொள்கிறார்.