எனது நண்பனாகிய ஜெய்மி ஒரு பெரிய சர்வதேச நிறுவனத்தில் பணி புரிகிறான். அந்நிறுவனத்தில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் ஒரு மனிதன் அவனது மேஜைக்கு வந்து, பேச ஆரம்பித்தார். ஜெய்மிக்கு அங்கு என்ன வேலையென வினவினார். தனது வேலையைப் பற்றிக் கூறிய ஜெய்மி அவனது பெயரைக் கேட்டான். “என் பெயர் ரிக்” எனப் பதிலளித்தார் அவர்.

“உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இங்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” ஜெய்மி கேட்டான்.

“ம்ம்! நான் இந்நிறுவனத்தின் உரிமையாளர்”

இந்த சாதாரணமான, தாழ்மையான உரையாடல்தான் உலகிலேயே மிகவும் பெரிய பணக்காரர்களில் ஒருவரோடு தனது அறிமுகம் என்று ஜெய்மி திடீரென்று புரிந்து கொண்டான்.

தன்னைத் தானே உயர்த்துவதும் பெருமைப்பட்டுக் கொள்ளுவதும் பெருகிப்போன இந்த நாட்களில் இந்தச் சிறிய சம்பவம் பவுல் பிலிப்பியர் நிருபத்தில் எழுதியதை நமக்கு நினைவுபடுத்துகிறது: “ஒன்றையும் வாதினாலாவது வீண பெருமையினாலாவது செய்ய வேண்டாம்” (2:3). தங்களது நலனையல்ல பிறரது நன்மையைத் தேடுகிறவர்கள் பவுல் குறிப்பிடும் குணாதிசயத்தைப் பெற்றவர்கள்.

பிறரை நம்மைவிட மேன்மையானவர்களாக எண்ணும்போது (வச. 3) கிறிஸ்துவின் எளிமையை நாம் வெளிப்படுத்துகிறோம். ஊழியம் கொள்ளுபடி வராமல் ஊழியஞ்செய்யும்படி வந்த இயேசுவை நாம் பிரதிபலிக்கிறோம். (மாற். 10:45). அடிமையின் சுபாவத்தை நாம் ஏற்றுக்கொள்ளுகையில் (பிலி. 2:7) இயேசுவின் சிந்தையை நாம் பெறுகிறோம் (வச. 5).

இன்று நாம் பிறறோடு தொடர்புகொள்ளும்போது, நமக்கானவைகளை மட்டும் பாராமல் பிறருக்கானவைகளையும் நோக்கக் கடவோம் (வச. 4).