ஆஸ்திரேலியாவின் நகரங்களுக்கிடையில் காரில் செல்ல பல மணி நேரம் ஆகும். உடல் சோர்வு பல கொடிய விபத்துகளுக்குக் காரணமாகலாம். எனவே நெருக்கம் நிறைந்த விடுமுறை நாட்களில் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஓய்வு நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு தன்னார்வத் தொண்டர்கள் இலவசமாக காப்பி வழங்குகின்றனர். நெடுந்தூரம் காரில் பயணம் செய்கையில் நானும் எனது மனைவி மெரினும் இவ்வித நிறுத்தங்களை மிகவும் ரசித்து நேசிக்கலானோம்.
ஒரு சமயம் காரை ஒரு ஓய்வு நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, காப்பி அருந்தச் சென்றோம். ஒரு பணியாளர் இரு கோப்பை காப்பியை நீட்டி, இரு டாலர்கள் தருமாறு கேட்டாள். ஏன் என்று கேட்டேன். அங்கிருந்த விளம்பர அட்டையைப் படிக்குமாறு கூறினாள். இந்நிறுத்தத்தில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமே இலவச காப்பி, மற்ற பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எரிச்சலடைந்த நான் இது ஒரு போலி விளம்பரமென அவளிடம் கூறினேன். இரண்டு டாலரைப் செலுத்திவிட்டு எங்கள் காரை நோக்கி நடந்து சென்றேன். காருக்குச் சென்றபோது என் மனைவி மெரின் எனது பிழையைச் சுட்டிக் காண்பித்தாள்: பரிசு ஒன்றை எனது உரிமைப் பொருளாக எண்ணிக்கொண்டு நான் பெற்றுக்கொண்டதற்கு நன்றி செலுத்தத்தவறிவிட்டேன். அவள் மிகச்சரியாய்ச் சொன்னாள்.
வாக்குத்தத்த தேசத்தை நோக்கி இஸ்ரவேலரை நடத்திச் சென்ற மோசே நன்றியுள்ள மக்களாய் விளங்கும்படி அவர்களை கேட்டுக்கொண்டார் (உபா. 8:10) தேவனுடைய ஆசிர்வாதத்தால் அந்த தேசம் நிறைந்திருந்தது என்றாலும், இந்த செழிப்பு நிலைக்கு தாங்கள் தகுதியானவர்கள் என்பதுபோல அம் மக்கள் நடந்து கொண்டனர் (வச. 17,18). இதன் அடிப்படையில், யூத மக்கள் தங்களது ஒவ்வொரு சாப்பாட்டுக்காகவும் சிறிதோ பெரிதோ தேவனைத் நன்றி கூற ஆரம்பித்தார்கள். அவர்களைப் பொறுத்தமட்டும் எல்லாமே இலவசப் பரிசு.
நான் திரும்பிச் சென்று அந்தப் பெண் பணியாளரிடம் மன்னிப்புக் கேட்டேன். தகுதியற்ற எனக்கு ஒரு கோப்பை காப்பி என்பது ஒரு இலவசப் பரிசு, அதற்காக நான் நன்றிசெலுத்த வேண்டும்.
மிகச் சிறிய இலவச ஈவிற்காகவும் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாய் இருங்கள்!