தனது மாணவர்களின் தரமற்ற எழுதும் பழக்கங்களினால் மிகவும் அதிர்ச்சியடைந்த எழுத்தாளரும் கல்லூரி பேராசிரியருமான டேவிட் ஃபோஸ்டர் வாலஸ், மாணவர்களது திறமையைத் தான் எவ்வாறு மேம்படுத்தக்கூடும் என யோசித்தார். அப்போதுதான் ஒரு திடுக்கிடும் கேள்வி அவர் முன் எழுந்தது. “ஆரவாரமிக்க, குறுகிய மனதுடைய, சுயநீதிமிக்க, கீழ்த்தரமான” தம்மைப் போன்ற ஒருவரிடம் கற்றுக்கொள்வதை எப்படி மாணவர்கள் விரும்புவார்கள் என்ற கேள்வியை அவர் தனக்குத் தானே கேட்க வேண்டியதாயிருந்தது. பெருமை என்னும் பிரச்சனை இருப்பதை அவர் அறிந்தார்.

அந்தப் பேராசிரியர் மாற முடியும், மாறினார். எனினும் தன்னுடைய மாணவரில் ஒருவராக அவர் மாற முடியாது. இயேசுவானவர் பூவுலகிற்கு வந்தபோது, நம்மில் ஒருவராக அவர் மாறியதன் மூலம் தாழ்மை இன்னதென்று அவர் நமக்குக் காண்பித்ததை அனைத்துவித எல்லைக் கோடுகளையும் தாண்டிய இயேசுவானவர், பிறருக்கு சேவை செய்வதிலும், போதிப்பதிலும், தமது பிதாவின் சித்தத்தைச் செய்வதிலும் மும்முரமாயிருந்தார்.

தாம் சிலுவையில் அறையப்பட்ட வேளையிலும், தம்மைக் கொலை செய்தவர்களை மன்னிக்குமாறு இயேசு ஜெபித்தார் (லூக். 23:34). வேதனையின் மத்தியிலும் தம்மோடு மரித்துக் கொண்டிருந்த குற்றவாளிக்கு அவர் நித்திய ஜீவனை அளித்தார் (வச. 42,43).

இயேசுவானவர் ஏன் அப்படி நடந்து கொண்டார்?  நம்மைப் போன்ற மக்களுக்குத் தமது வாழ்நாள் இறுதி மட்டும் அவர் ஏன் சேவை செய்தார்? அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார். அன்பினால் அவர் அப்படிச் செய்தார்! மேலும், “ அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்” பின்பும் அவர் “நாமும் சகோதரருக்காக ஜீவனை கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (1 யோவா. 3:16) என்றும் கூறுகிறார்.

அவரது அன்பு நமது பெருமை, ஆரவார மற்றும் கீழ்த்தரமான குணம் முற்றிலும் அகற்றுகிறது. அதை மிகவும் வல்லமையான விதத்தில் அவர் செய்தார். தமது ஜீவனையே அவர் கொடுத்தார்!