ஜமைக்காவில் மோண்டிகோ பே என்ற இடத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு கூட்ட பதின் வயதினர் சென்ற பொழுது, அந்த அறையில் கடைசியில் மிகவும் தனிமையாக இருந்த ஒரு மனிதனை ஓர் இளம்பெண் கவனித்தாள். அவனுக்கென்று இவ்வுலகில் தூங்குவதற்கென ஒரு படுக்கை மட்டும் இருந்ததே தவிர வேறே ஒன்றும் கிடையாது. அத்தோடு அவனது உடல் ஊனத்தால், அவனது படுக்கையைவிட்டு எழுவதற்கு இயலாத நிலையில் இருந்தான்.
அந்த வாலிபப் பெண் அந்த மனிதனிடம் சென்று, அவனிடம் நேரிடையாக தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு, வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தாள். “நான் அந்த மனிதனோடு வேதத்தை பகிர்ந்து கொண்டபொழுது, அவன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வாஞ்சையாக இருந்ததை உணர ஆரம்பித்தேன்”, என்று அப்பெண் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தாள். அந்த மனிதனின் ஆர்வத்தை அவள் உணர்ந்து, இயேசு நமக்காக பலியானதின் அற்புதத்தை விளக்கினாள். “ஒரு குடும்பமோ எந்தவித நம்பிக்கையுமோ இல்லாத அந்த மனிதன், அவன் ஒருக்காலும் சந்தித்திராத யாரோ ஒருவர் அவனது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும் அளவிற்கு அவனை நேசித்தார் என்பதை அவனால் நம்ப இயலவில்லை” என்று பிற்காலத்தில் அவள் நினைவு கூர்ந்தாள்.
அந்த மனிதனுக்கு மேலும் அதிகமாய் அவள் இயேசுவைப்பற்றி கூறி, அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் புதிய சரீரத்தை கொடுப்பதோடு, பரலோகத்தையும் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பதைப்பற்றிக் கூறினாள். அந்த மனிதன் “பரலோகத்திலே நீ என்னோடு கூட நடனமாடுவாயா?” என்று அவளிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டவுடனேயே, அவன் அவனது பெலனற்ற ஊனமுற்ற செயல்பட இயலாத, அவனது சரீரத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவன் கற்பனை பண்ணியதை அவள் புரிந்து கொண்டாள்.
இயேசுவை அவனது இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவன் கூறிய பொழுது அவனது பாவமன்னிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி அவனுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தாள். அவனோடு சேர்ந்து அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் கேட்டபொழுது, “நான் உட்காருவதற்கு நீ உதவி செய்தால், நான் ஒரு புதிய மனிதன்” என்றான். வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய, நம்பிக்கை அருளக் கூடிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் அந்த சுவிஷேம் புதிய ஜீவனை அருளுகிறது (கொலோ. 1:5,23).
இயேசு புதிய ஜீவனை அருளுகிறார்.