நியுயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு உலக நிகழ்ச்சிகளை சேகரிப்பதற்காக ஜான் F. பர்ன்ஸ் 40 ஆண்டுகளை செலவழித்தார். அவர் 2015ல் ஓய்வு பெற்றபின் எழுதின ஒரு கட்டுரையில் அவருடன் பணிபுரிந்த பத்திரிகையாளரும் புற்றுநோயினால் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவருமான அவரது நெருங்கிய நண்பரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து எழுதினார். “நீ எவ்வளவு தூரம் பயணம் செய்தாய் என்பது முக்கியமல்ல, ஆனால் நீ திரும்பி வரும்பொழுது என்ன கொண்டு வந்தாய் என்பதே முக்கியம் என்பதை மறந்துவிடாதே” என்று அந்த நண்பர் கூறினார்.
மேய்ப்பனாக இருந்த தாவீது போர் வீரனாக மாறி, இறுதியில் ராஜாவாகவும் ஆன அவனது வாழ்க்கைப் பயணத்தில், அவன் திரும்பிக் கொண்டு வந்தவைகள் அட்டவணையாக சங்கீதம் 37 இருக்கலாம். அந்த சங்கீதத்தில் நீதிமானுக்கும், பொல்லாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை செய்யுள் வடிவத்தில் கூறுவதோடு, கர்த்தரை நம்புகிறவர்களுக்கோ அவரது கிருபை நிச்சயம் என்பதை உறுதிப்படுத்துகிறது. பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சல் அடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள் மேல் பொறாமை கொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும் பூண்டைப்போல் வாடிப் போவார்கள்” (வச. 1-2).
“நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்” (வச. 23,24).
“நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை” (வச. 25).
வாழ்க்கையில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களின்மூலம், தேவன் நமக்கு கற்றுக்கொடுத்தது என்ன? அவருடைய உண்மைத் தன்மையையும், அன்பையும் எவ்வாறு நாம் அனுபவித்துள்ளோம்? நாம் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் மூலம், தேவன் நமக்கு கற்றுக்கொடுத்தது என்ன? எந்த வகைகளில் தேவனுடைய அன்பு நமது வாழ்க்கையை உருவாக்கியுள்ளது?
நமது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கடந்து வந்தோம் என்பது முக்கியமல்ல! நாம் திரும்ப கொண்டு வந்தது என்ன என்பதுதான் முக்கியமாகும்.
வருடங்கள் கூடும்பொழுது, தேவனுடைய உண்மைத் தன்மையும் பெருகிக் கொண்டே இருக்கிறது.