ஜெபிக்க விரும்பிய ஒரு பெண் காலியாக இருந்த ஒரு நாற்காலியைப், பிடித்து இழுத்து அதன் முன் முழங்கால்படியிட்டாள். பின் கண்ணீரோடுகூட அவள் “எனது அன்பின் பரம தகப்பனே, இந்த நாற்காலியில் உட்காரும், நீங்களும், நானும் பேச வேண்டியது உள்ளது” என்று கூறினாள். பின்பு அந்தக் காலியான நாற்காலியைப் பார்த்து ஜெபித்தாள். அந்தக் காலியான நாற்காலியில் தேவன் அமர்ந்து அவளது ஜெபத்தைக் கேட்பதாக அவள் கற்பனை பண்ணியதின்மூலம், தேவனண்டை நெருங்கி வருவதாக அவன் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தாள்.
சர்வ வல்லமையுள்ள தேவனோடு ஈடுபாடு கொண்டு அவரோடு செலவழிக்கும் நேரம் மிகவும் முக்கியமானது. நாம் அவரை நெருங்கும்பொழுது அவர் நம்மண்டை நெருங்கி வருவார் (யாக். 4:8). “சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்று (மத். 28:20) அவர் நமக்கு வாக்குப்பண்ணியுள்ளார். நம்முடைய பரமபிதா நாம் அவரண்டை நெருங்கி வரவேண்டுமென்று எப்பொழுதும் காத்திருப்பதோடு, நமது விண்ணப்பங்களுக்கு செவி சாய்க்கவும் ஆயத்தமாக இருக்கிறார்.
நாம் களைப்பாக உணரும் பொழுதோ, துக்க உணர்வால் மேற்கொள்ளப்படும் பொழுதோ, சுகவீனமாக பெலவீனமாக இருக்கும் பொழுதோ, ஜெபம் பண்ணுவதற்கு நமக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால், நாம் பெலனற்று இருக்கும் பொழுது, அல்லது சோதனைகளை சந்திக்கும் பொழுது, இயேசு நமக்காக இரங்குகிறார். “ஆகவே நாம் இரக்கத்தைப் பெறவும்,ஏற்ற சமயத்தில் சகாயம் செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (வச. 16).
தேவன் எவ்விடத்திலும் இருக்கிறார். எந்த நேரத்திலும் அவரை அணுகலாம்;
அவர் எப்பொழுதும் நமக்கு செவி சாய்க்கிறார்.