வேலை ஸ்தலத்திலே, நம்மை ஊக்குவிக்கும் வார்த்தைகள் மிக அவசியமானது. ஊழியர்களின் உரையாடல்கள், அந்நிறுவனத்தின் லாபம், மற்றும் வாடிக்கையாளர்களின் மனநிறைவு, மற்றும் சக ஊழியரின் அங்கீகாரம் பாராட்டு, ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். நன்கு செயல்படக் கூடிய குழுக்கள், அதிருப்தி, எதிர்ப்பு, பரிகாசம், ஆகியவற்றைக் காட்டிலும், ஆறு மடங்கு நம்பிக்கையூட்டும் ஆக்கப்பூர்வமான வார்த்தைகளை உபயோகிப்பதாக, ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. அதேசமயம், மோசமாக செயல்படும் குழுக்கள், ஒவ்வொரு நன்மையான வார்த்தைக்கும், மூன்று மடங்கு அதிக எதிர்மறையான கருத்துகளையே உபயோகிக்கிறார்கள்.

உறவுகள் கட்டப்படுவதற்கும், நல்ல விளைவுகளை காணவும், வார்த்தைகள் எவ்வளவு

முக்கியமானவைகள் என்பதை, தன் அனுபவத்தின் மூலம் பவுல் கற்றறிந்தான். தமஸ்கு பட்டணத்திற்கு செல்லும் வழியிலே, இயேசுவை சந்திக்கும் முன்பு, தன் வார்த்தையினாலும் செயல்களினாலும், இயேசுவை பின்பற்றுகிறவர்களை அச்சுறுத்தி உபத்திரவப்படுத்தினான். ஆனால், அவன் தெசலோனியர்களுக்கு கடிதம் எழுதும் காலக்கட்டதிற்குள்ளாக, தேவன் அவன் இருதயத்திலே செய்த கிரியையினாலே, பிறரை மிகுதியாய் ஊக்குவிப்பவனாக மாறிப்போனான். மேலும், தன்னை உதாரணமாக ஏற்றுக்கொண்டு, நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும்படி வேண்டினான். ஆயினும், முகஸ்துதியை தவிர்க்க ஜாக்கிரத்தையாக இருக்கவும்,  கிறிஸ்துவின் ஆவியை பிரதிபலித்து, பிறரை நல் வார்த்தையினால் ஊக்குவிக்க கற்றுத் தந்தான்.

நாம் பிறரை ஊக்குவிக்க, நமக்கு தேவையான பெலனை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம் என்பதை பவுல் நினைவுகூருகிறான். நம்மை மிகுதியாய் நேசித்து, நமக்காக மரித்த இயேசுவிடம், நம்மை முற்றிலுமாக ஒப்படைத்து, அவர் மூலம் நாம் பிறரை ஆற்றவும் தேற்றவும் மன்னிக்கவும் ஊக்குவிக்கவும் நேசிக்கவும் செய்வோமாக (1 தெச. 5:1௦-11).

நாம் ஒருவருக்கொருவர் உதவுவதின் மூலம், தேவனுடைய பொறுமையையும் நன்மையையும் ருசிபார்க்க அறிந்துகொள்ளக் கூடும் என்பதை, பவுல் நமக்கு காண்பிக்கிறார்.