நமக்கு மிகவும் பிடித்தமான பீனட்ஸ் (Peanuts) என்னும் காமிக் தொடரின் படைப்பாளருமான சார்ல்ஸ் ஷல்ஸின் (Charles Schulz 1922-2000) நினைவுநாள் ஆராதனையில் அவருடைய நண்பரும் நகைச்சுவை சித்திரப்படைப்பாளருமான கேத்தி கைஸ்வைட் (Cathy Guisewite) அவருடைய இரக்க குணத்தையும், மனிதநேயத்தையும் பற்றிப் பேசினார். “நாம் அனைவரும் ஒருபோதும் தனிமையாக உணராதபடி இவ்வுலகத்திலுள்ள அனைவருடைய உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் பல கதாபாத்திரங்களை படைத்தார். நாங்கள் ஒருபோதும் தனிமையாக உணராதபடி தன்னையே எங்களுக்கு தந்தருளினார். எங்களுக்கு பரிவுகாட்டி எங்களை உற்சாகப்படுத்தினார். எங்களில் ஒருவராகவே அவரைக் கருதும்படி உணரச்செய்தார்” எனக் கூறினார்.
நம்மை ஒருவரும் புரிந்துகொள்ளவில்லையே அல்லது நமக்கு ஒருவராலும் உதவி செய்ய முடியாதே என நாம் நினைக்கலாம். ஆனால் தம்மையே நமக்காகக் கொடுத்த இயேசு, நம்மை முற்றிலும் அறிந்தவராயும், இன்றைய தினம் நாம் எதிர்கொள்ளும் அனைத்தையும் அறிந்தவராயும் இருக்கிறார்.
எபிரேயர் 2:9-18 வசனங்கள் இயேசு இப்பூமியிலே வாழ்ந்த பொழுது மனித சாயலை முற்றிலும் தரித்தவராய் வாழ்ந்தார் (வச. 14) என்னும் ஒப்பற்ற அதிசயத்தக்க சத்தியத்தை எடுத்துரைக்கிறது. அவர் “ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசி பார்த்தார்” (வச. 9), பிசாசின் வல்லமையை அழித்தார் (வச. 14), “ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலையாக்கினார்”(வச. 15). இயேசு “இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்து (வச. 17).
இயேசுவைப் போல் ஒருவரும் நம்மைப் புரிந்துகொள்வதில்லை.