2014ஆம் ஆண்டு கென்டக்கி (Kentucky) யில் உள்ள தேசிய கார்வெட் (Corvette) அருங்காட்சியத்தில் ஒரு புதைகுழி தோன்றியது. அதில் ஈடுசெய்ய முடியாத எட்டு உயர்தர செவ்ரோலெட் கார்வெட் பந்தயக் கார்கள் (Chevrolet Corvette Sports Cars) புதையுண்டன. அவ்வாகனங்கள் மிகவும் சேதமடைந்தன. அவற்றில் சில பழுது நீக்கம் செய்ய முடியாத அளவிற்கு சிதைந்து போயின.
அதில் ஒரு குறிப்பிட்ட கார் அதிக கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் 1992ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் 10 லட்சம் இலக்கை எட்டிய கார் அது. ஆகவே அங்கிருந்த கார்களிலே மிகவும் விலையேறப்பெற்ற வாகனம் அது. புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்டபின்பு இந்த பொக்கிஷத்திற்கு நிகழ்ந்தவை மிகவும் சுவாரஸ்யமானது. கைதேர்ந்த நிபுணர்கள் அவ்வாகனத்தை புத்தம் புதிய வாகனமாக மாற்றிவிட்டார்கள். அதின் மூலப்பொருட்களை பழுது பார்த்து அதை சரிசெய்து விட்டார்கள். இந்த அழகான சிறிய கார் பயங்கரமான நிலையில் இருந்திருந்தாலும், அது உற்பத்தி செய்த நாளில் எவ்வளவு அழகாய் காட்சியளித்ததோ அதைப்போலவே இப்பொழுதும் உள்ளது.
பழைய சேதமடைந்த பொருள் புதிதாக்கப்பட்டது.
கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாகிய நமக்கு தேவன் வைத்திருப்பவற்றை பெரிதாக இச்சம்பவம் நினைவுகூருகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 21:1ல் தான் கண்ட “புதிய வானம், புதிய பூமியை” குறித்து யோவான் கூறுகிறார். அநேக வேதாகம பண்டிதர்கள் “புதிய பூமி” என்பது புதுப்பிக்கப்பட்ட பூமியே என கருதுகிறார்கள். ஏனெனில், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள “புதிய” என்னும் வார்த்தை “புதிதான” அல்லது “புதுப்பிக்கப்பட்ட” என்னும் அர்த்தம் உடையதாய் இருக்கிறது. அதாவது அழுகி நாசமடைந்ததை துடைத்து புத்தம் புதிதாய் மாற்றியது போல. இப்பூமியில் சீர்கெட்டுள்ள அனைத்தையும் தேவன் புதுப்பித்து, விசுவாசிகளாகிய நாம் அவரோடு வாழ, நாம் அறிந்த பூமியை புத்தம் புதிய பூமியாக மாற்றிவிடுவார். நமக்கு பரிட்சயமான ஆனால் அதே சமயம் புதிதாக்கப்பட்ட புதிய அழகான பூமி என்னும் அற்புதமான இச்சத்தியத்தை சிந்தித்துப் பார்த்தால் தேவனுடைய மகத்தான கைவண்ணம் விளங்கும்
நமது சிருஷ்டிகர்த்தர் எல்லாவற்றையும் புதிதாக்குகிறார்.