1929ஆம் ஆண்டின் ஒரு சனிக்கிழமை மாலை எனும் இதழில் “சிறு பிள்ளையாக வேதாகமத்திலிருந்தும், தால்முட்டிலிருந்தும் (Talmud – நியாயப் பிரமாண விளக்கவுரை) அறிவுரை பெற்றேன். நான் ஒரு யூதனாக இருந்தாலும் அந்த பிரகாசமான நசரேயனால் பரவசமடைந்தேன். சுவிசேஷத்தை படிக்கும் பொழுது, இயேசுவின் பிரசன்னத்தை உணராமல் ஒருவனாலும் இருக்க முடியாது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் ஜீவிக்கிறார். எந்தப் புராணக்கதையிலும் அப்படிபட்ட ஜீவன் இல்லை” என்று ஆல்பர்ட் கூறினார்.

இயேசுவை பின்பற்றினவர்கள், அவர் விசேஷமானவர் என்று உணர்ந்திருந்ததைக் குறித்து புதிய ஏற்பாட்டிலே கூறியுள்ளனர். தன்னைப் பின்பற்றினவர்களை நோக்கிப் பார்த்து இயேசு, “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் ஏரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் பதில் கூறினார்கள்” (மத். 16:13-14). இஸ்ரவேல் தேசத்தின் தலைசிறந்த தீர்க்கதரிசிகளோடு ஒப்பிடப்படுவது மிகப் பெரிய பாராட்டுதான். ஆனால், இயேசு பாராட்டுதல்களை தேடவில்லை. அவர் அவர்களுடைய புரிதலை ஆராய்ந்து விசுவாசத்தை தேடினார். ஆகவே அவர் இரண்டாவதாக ஒரு கேள்வி கேட்டார் “நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்” (16:15).

“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” (வச. 16) என்று பேதுரு உரைத்த வார்த்தைகளில் இயேசுவின் உண்மையான அடையாளம் முழுமையாக வெளிப்பட்டது. இயேசு அவரையும், நம்மை காப்பாற்றும் அவருடைய அன்பையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று மிகவும் வாஞ்சிக்கிறார். ஆகவே தான் “இயேசு யாரென்று நீ நினைக்கின்றாய்?” என்ற கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் இறுதியாகப் பதில் கூற வேண்டும்.